முதல்வர் பதவிக்கு தயாநிதி போட்டி-சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

கோபிச்செட்டிப்பாளையம்:

திமுக இப்போது தயாநிதி முன்னேற்றக் கழகம் ஆகிவிட்டது. முதல்வர் பதவியைப் பிடிக்க தயாநிதி பலஅதிரடிகளை செய்து வருகிறார் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் குமார் பேசுகையில்,

என்னை வாழ வைத்து உருவாக்கியது கோபி மண். இங்கு பல முறை சூட்டிங்குக்கு வந்துள்ளேன். திமுகவில் 8வருடம் இருந்தேன். மரியாதை கிடைக்கவில்லை.

அங்கு அராஜகமும் சர்வாதிகாரமும் தலைதூக்கி ஆடுவதால் வெளியேறிவிட்டேன். மதியாதார் வாசல்தலைமிதிக்க வேண்டாம் என்பதால் எங்கு இருக்க வேண்டுமோ இப்போது அங்கிருக்கிறேன்.

என் மனைவி ராதிகா கருணாநிதியின் மகள் போல அவர்களது வீட்டில் 25 வருடம் இருந்தவர். அவரே எனக்குதிமுகவில் ஏற்பட்ட வேதனைகளைப் பார்த்து உங்கள் முடிவை நீங்கள் எடுங்கள் என்றார்.

ஜெயலலிதாவிடம் தான் ஜனநாயகம் இருக்கிறது. அவரது ஆட்சியில் தமிழகம் பெரும் வளர்ச்சிஅடைந்துவிட்டது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கும் ஒரே முதல்வர் அவர் கதான்.

திமுக இப்போது தயாநிதி முன்னேற்றக் கழகம் ஆகிவிட்டது. முதல்வர் பதவியைப் பிடிக்க தயாநிதி பலஅதிரடிகளை செய்து வருகிறார். கட்சியின் கண்ட்ரோல் பவராக (??) தயாநிதி இருக்கிறார். டாடாவையேமிரட்டுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்றார்.

அதிமுக கூட்டங்களில் பங்கேற்கும் குமாருக்கு கூட்டம் முடிந்தவுடனேயே அமெளன்ட் செட்டில் செய்யப்பட்டுவிடுகிறது. இல்லாவிட்டாலும் அதை கறாராகக் கேட்டு வாங்கி விடுகிறார்.

மதுரையில் கூட்டம் முடிந்தவுடன் டிடி எங்கப்பா என்று சரத்குமார் கேட்டது மைக்கில் ஊரெல்லாம் கேட்டுள்ளது.இதையடுத்து எல்லோரும் பார்க்கும்போதே மேடையில் வைத்தே டிடியை குமாரிடம் கொடுத்துள்ளார் அதிமுகபார்ட்டி.

எதையும் அமுக்கமா செய்ய மாட்டீங்களே என்று அவரை வாட்டியவாரே டிடியை வாங்கிப் போட்டுக்கொண்டாராம் குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+