சாப்ட்வேர் பார்க்குகள்-திமுக, காங் உறுதிமொழி
திருவண்ணாமலை:
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலூரிலும் திருவண்ணாமலையிலும் சாப்ட்வேர் பார்க்குகளை உருவாக்கி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டு வந்து ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் திமுகவும்காங்கிரசும் உறுதியளித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் பிரச்சாரத்துக்கு படித்தவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நல்ல வரவேற்புகிடைத்து வருகிறது.திருவண்ணாமலையில் இருந்து 3வது முறையாக போட்டியிடும் முன்னாள் திமுக அமைச்சர் கு.பிச்சாண்டியும்வேலூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனும் தங்கள் பிரச்சாரத்தில் சாப்ட்வேர் பார்க்கையேமுன்னிலைப்படுத்துகின்றனர்.
மத்தியில் தயாநிதி மாறன் இருக்கிறார். மாநிலத்தில் கருணாநிதி ஆட்சி அமைந்தால் ஏராளமான சாப்ட்வேர்,பிபிஓ நிறுவனங்களை தமிழகத்துக்குக் கொண்டு வருவோம். அவற்றை வேலூர், திருவண்ணாமலைக்கும்கொண்டு வருவோம்.
இது தொடர்பாக தயாநிதி மாறனிடம் உறுதிமொழியும் வாங்கியுள்ளோம். அவரை விடாமல் வற்புறுத்திசாப்ட்வேர் பார்க்குகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கவோம் என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications