வாங்கிக்கோ சேலை-குடம்: அதிமுக மீது புகார்
சென்னை:
சென்னை நகரில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் குடங்கள், சேலைகள்கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பாண்டி பஜார் (தியாகராய நகர் தொகுதிக்குட்பட்டது) பகுதியில் உள்ளமாநகராட்சி அலுவலகத்தில் சேலம், குடம், பணம் ஆகியவை வழங்கப்படுவதாகதகவல் பரவியது. இதையடுத்து அங்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் திரண்டு சென்றனர்.அங்கு நின்றிருந்த அதிமுக கவுன்சிலர் மகாலட்சுமியிடம் இதுகுறித்து கேள்விகேட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து குடம், சேலை, பணம் (ரூ. 200) கொடுப்பது நிறுத்தப்பட்டது.பின்னர் இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதில், 126வது வட்ட அதிக கவுன்சிலர் மகாலட்சுமி, வாக்காளர்களுக்கு எவர்சில்வர்குடம், புடவை மற்றும் பணம் ஆகியவற்றைக் கொடுத்ததாக எனக்கு புகார்வந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, இலவச குடம், சேலை, பணத்தை அதிக சார்பில் யாரும்வழங்கவில்லை. அதிமுக சார்பில் பிரசாரத்திற்கு வரும் பெண்களுக்கு அதிமுக கரைபோட்ட சேலைகளைத்தான் வழங்கினோம் என்றார் மகாலட்சுமி.
நத்தத்தில் மோதிர பிரச்சாரம்:
இந் நிலையில் நத்தம் தொகுதியில் அமைச்சர் விஸ்வநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர்கள் மோதிரம் தருவதாக பிரச்சாரம் செய்தனர். இதையடுத்துஅவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களால் அப் பகுதியில் திமுக, அதிமுகவினரிடையேமோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து இந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications