ஒண்டிக்கு ஒண்டி: டாடாவை தயாநிதி மிரட்டியிருப்பார்- இல.கணேசன்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று ஆயிரக்கணக்கான பேர் முன்னால் வைகோவைமிரட்டிய தயாநிதி மாறன், டாடாவையும் மிரட்டியிருப்பார் என்று நம்பலாம் எனஅகில இந்திய பாஜக துணைத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில்,

கடந்த ஒரு மாதத்திற்கு முன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டினார் என்றுகூறப்பட்டிருந்தால், தயாநிதியின் தோறறத்தை பார்த்து யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

ஆனால் சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கானவர்கள் முன்பு,ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று கேட்டு வைகோவை தயாநிதி மிரட்டியதைப்பார்க்கும்போது, நிநச்சயம் அவர் டாடாவை மிரட்டியிருப்பார் என்று நம்பத்தோன்றுகிறது.

தயாநிதி மாறனை உடனடியாக தொலைத் தொடர்புத் துறையிலிருந்து மாற்றியாகவேண்டும். மக்கள் கையில் சக்தி வாய்ந்து வாக்கு என்ற ஆயுதம் உள்ளது. அதைமக்கள் பயன்படுத்தியே தீருவார்கள்.

தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றம் கூடும்போது, அந்தப்பிரச்சனையை எப்படி எழுப்புவது என்று அத்வானி வெளியிடுவார்.

மிரட்டல் அரசியல் எல்லாம் திமுகவுக்கும், அதன் குடும்பத்தினருக்கும் தான்சொந்தமானது. அநாகரீக அரசியல், ஊழல், மிரட்டல் அணுகுமுறை ஆகியவைதிமுகவுக்கு மட்டுமின்றி அதிமகவுக்கும் சொந்தமானது.

இப்படிப்பட்ட கட்சிகள் இன்று அரசியல் பேசுவதை விட அரிசி குறித்தும், தங்கம்குறித்தும்தான் அதிகம் பேசுகின்றன.

சுய மரியாதை இயக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுக இலவச அறிவிப்புகளைசரமாரியாக வெளியிடுவதைப் பார்க்கும்போது, சுய மரியாதையை காற்றில் பறக்கவிட்டு விட்டனர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

திமுகவின் குடும்ப அரசியல் குறித்து வாய் கிழியப் பேசும் வைகோவைப் பார்த்துக்கேட்கிறேன். உங்களால் சசிகலா குடும்பத்தைப் பற்றி பேச முடியுமா? அதைப்பற்றியும் அந்தக் குடும்பம் அரசில் செலுத்தும் ஆதிக்கம் குறித்தும் பேசாமல் இருப்பதுஏன்?

கருணாநிதி கூறிய மிருக சாதி விவகாரத்தை நான் ஊதிப் பெரிதாக்க விரும்பவில்லைஎன்றார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+