நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்!
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை (சனிக்கிழமை) மாலை 5மணியுடன் முடிவடைகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 8ம் தேதி நடைபெறுகிறது.இதையடுத்து கடந்த இரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் முடிவுக்குவருகிறது.
பிரச்சார காலம் முடிவடைந்ததும் அடுத்த 48 மணி நேரத்திற்கு எந்த வகையானபிரசாரமும் நடைபெறக் கூடாது.
தேர்தல் தொடர்பான கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தத் தடைவிதிக்கப்படும். அதே நேரத்தில் வீடு வீடாக சென்று அமைதியான முறையில் வாக்குசேகரிக்கலாம்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டம், பேரணி,பிரசாரம் போன்றவற்றை யாரும் மாலை 5 மணிக்கு மேல் நடத்தக் கூடாது.பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
சினிமா, தொலைக்காட்சி அல்லது அது போன்ற ஊடகங்கள் மூலம் தேர்தல் முடிவைபாதிக்கக் கூடிய வகையிலோ , வாக்காளரை திசை திருப்பக் கூடிய வகையிலோநிகழ்ச்சிகளை ஒளி, ஒலி பரப்பக் கூடாது.
இந்த விதிமுறைகளை யார் மீறினாலும் 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லதுஅபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
நிருபர்கள் சந்திப்பு, தேர்தல் ஆய்வரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை டிவி, ரேடியோக்கள்நடுநலையுடன் கூடியதாக நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் நரேஷ்குப்தா.
பிரசாரம் முடிவுக்கு வருவதையடுத்து தலைவர்கள் அனைவரும் தங்களது பிரசாரத்தைமுடுக்கி விட்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா நாளை மாலை 5 மணிக்கு தனது பிரசாரத்தை சென்னைஆர்.கே.நகர் தொகுதியில் முடிக்கிறார்.
வி.பி. சிங் வருகை:
திமுக தலைவர் கருணாநிதி தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் நாளைபிரசாரத்தை நிறைவு செய்கிறார். இங்கு நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் பிரதமர்வி.பி.சிங்கும் கலந்து கொள்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதியில்நாளை பிரசாரத்தை முடிக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிவகாசியில் நிறைவு செய்கிறார். விஜயகாந்த்விருத்தாச்சலத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.












Click it and Unblock the Notifications