பிளஸ் டூவில் வென்றால் இலவச கம்ப்யூட்டர்-ஜெ
சென்னை:
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிளஸ் டூ தேர்வுகளில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவசமாககம்ப்யூட்டர் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தனது 35வது நாள் பிரசாரத்தை இன்று சென்னை திருமங்கலத்தில் தொடங்கினார்ஜெயலலிதா. வில்லிவாக்கம் தொகுதி ஐ.என்.டி.யூ.சி. வேட்பாளர் ஜி.காளனைஆதரித்து அவர் பேசுகையில்,நாட்டிலேயே சென்னை நகரில் மட்டும்தான் இன்றைக்கு செட் டாப் பாக்ஸ் முறைஅமலில் உள்ளது. இந்தத் திட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்கருணாநிதி குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் எஸ்.சி.வி நிறுவனம்தான். மந்தையபாஜக ஆட்சியின்போது சென்னையில் மட்டும் செட் டாப் பாக்ஸ் முறைஅமல்படுத்தப்பட்டது.
இதை எதிர்த்து 2004, ஜனவரி மாதம் நான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன்.இதையடுத்து அத்திட்டததை ரத்து செய்து மத்திய அரசு பிப்ரவரி மாதம் அறிவிக்கைஒன்றை வெளியிட்டது. ஆனால் இதை எதிர்த்து எஸ்.சி.வி. நிறுவனம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்து, மத்திய அரசின் உத்தரவுக்குதடை உத்தரவு பெற்றது.
அதனால்தான் இன்றைக்கும் சென்னை வாழ் மக்கள் செட் டாப் பாக்ஸ் இல்லாமல் பலமுக்கிய சானல்களை பார்க்க முடியாத நிலை உள்ளது.
செட் டாப் பாக்ஸ் முறையை நீக்கினால், தங்களது குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கில்நஷ்டம் ஏற்படும் என்பதால் தான் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சி நிறுவனம்இந்தத் திட்டத்தை ரத்து செய்வதை எதிர்த்து வருகிறது.
எஸ்.சி.வி. நிறுவனம் மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 266 கோடிரூபாய் அளவுக்கு வருமானம் வருகிறது. எனவேதான் இத்துறையில் தங்களதுஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்த கருணாநிதி குடும்பம் முயன்று வருகிறது.
சென்னை மக்கள் மீது கருணாநிதிக்கு உண்மையான அக்கறை இருக்குமானால்,எஸ்.சி.வி. நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கை வாபஸ் பெறத் தயார் என்றுஅறிவிக்கத் தயாரா? செட் டாப் பாக்ஸ் இல்லாத வீடுகளில் மத்திய அரசுநிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை எஸ்.சி.வி. வசூலிக்கிறது.இதற்கு கருணாநிதி விளக்கம் அளிக்கத் தயாரா?
தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இப்போது அமலில் இல்லை.அதற்கான அரசாணையும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் மதமாற்றத்தடைச் சட்டம் இன்னும் அமலில் இருப்பதாக கருணாநிதி உள்ளிட்டோர் பொய்யானபிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிளஸ் டூ தேர்வுகளில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவசமாககம்ப்யூட்டர் வழங்கப்படும் என்றார் ஜெயலலிதா.
பின்னர் திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் மூர்த்தி, கும்மிடிப்பூண்டி அதிமுகவேட்பாளர் விஜயக்குமார் ஆகியோரை ஆதரித்தும் ஜெயலலிதா பிரசாரம்மேற்கொண்டார். தொடர்ந்து, பொன்னேரி, ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே.நகர்,துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளிலும் இன்று ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
இன்று இரவு ராதாகிருஷ்ணன் சாலையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்ஜெயலலிதா.
மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரி:
முன்னதாக நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.பூந்தமல்லியில் தொடங்கிய அவர் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் செய்துபேசினார்.
திருத்தணியில் அவர் பேசுகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நான் திட்டமிட்டுள்ளேன். அதிமுக மீண்டும்ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்அமைக்கப்படும்.
இதுதவிர 2 புதிய பல் மருத்துவக் கல்லூரிகள், 22 அரசு பொறியியல் கல்லூரிகளையும்அதிமுக அரசு உருவாக்கும்.
ஏழைப் பெண்களுக்கு அரை பவுன் தங்கத் தாலி இலவசமாக வழங்கப்படும். ஒருவீட்டில் எத்தனை திருமணமாகாத பெண்கள் இருந்தாலும் அத்தனை பேருக்கும் தங்கத்தாலி இலவசம்.
ரேஷன் கடைகளில் முதல் பத்து கிலோ அரிசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.அது போதும் என்றால் 10 கிலோ இலவச அரிசியை மட்டும் பெற்றுக் கொண்டுசெல்லலாம்.
கூடுதலாக 10 கிலோ அரியை வாங்க விரும்பினால் கிலோ அரிசி ஒன்னேமுக்கால்எனும் விலைக்கு வாங்கிச் செல்லலாம்.
ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில்பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது மத்திய அரசு. இப்போதுகூட விலையை உயர்த்த காத்திருக்கிறார்கள்.
ஆனால் தேர்தல் குறுக்கிட்டு விட்டதால், ஓட்டுக்கள் கிடைக்காமல் போய் விடுமேஎன்பதற்காக விலையை உயர்த்தாமல் நிறுத்தி வைத்துளளனர்.
தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தத்திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 முறை பெட்ரோல், டீசல்விலையை திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு உயர்த்தி சாதனை படைத்துள்ளது.
இவர்களது ஒரே சாதனை இதுதான். இப்படிப்பட்ட அரசு நமக்குத் தேவையா?இவர்கள் எத்தனை முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும், எனது அரசுமக்கள் நலன் கருதி ஒரு முறை பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை.
இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் மக்கள் நலன் கருதி அதை நாங்கள்பொறுத்துக் கொண்டுள்ளோம்.
சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு முட்டுக் கட்டைபோட்டது. சுனாமி நிவாரண நிதியைத் தடுத்து விட்டார்கள். வெள்ள நிவாரண நிதியைவழங்காமல் தடுத்தனர்.
மக்கள் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள திமுகவும் அதன்கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications