சிறையில் ஜான் பாண்டியனைக் கொல்ல முயற்சி!
கடலூர்:
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள ஜான் பாண்டியனை சிறைக்குள்ளேயே வைத்து கொலை செய்யஇன்று முயற்சி நடந்தது.
தலித் அமைப்பான தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் தலைவரான ஜான்பாண்டியன் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை எழும்பூர்தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் சொற்ப வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.ஓட்டு எண்ணிக்கையின்போது எழும்பூர் தொகுதியில் பெரும் வன்முறையில்இறங்கினார் ஜான் பாண்டியன். திமுக வேட்பாளராக போட்டியிட்ட பரிதி இளம்வழுதிகடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந் நிலையில, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜான் பாண்டியன்.
இந்த முறை அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது மனைவிதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந் நிலையில் இன்று காலை சிறையில் இன்னொரு கைதிக்கும் ஒருவருக்கும், ஜான்பாண்டியனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் ஜான் பாண்டியனை வேறு சில கைதிகள் சேர்ந்து கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜான் பாண்டியன் ஆதரவு கைதிகளும், மற்ற கைதிகளும்கடுமையாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார்குவிக்கப்பட்டனர்.
சிறைக்குள் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. சிறைக்குள்ளும், வெளியிலும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர் சிறையில்தான் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் கைதியான அப்புஅடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications