பொதிகைத் தென்றலும், புழுதிப் புயலும்!
சென்னை:
பொதிகைத் தென்றலாய் விளங்குகிறார் ஜெயலலிதா, மறுபக்கம் தூசியைக் கிளப்பும்புழுதிப் புயலாய் இருக்கிறார் கருணாநிதி என்று காளிமுத்து கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்துஅக்கட்சியின் அவைத் தலைவர் காளிமுத்து கொருக்குப்பேட்டையில் நடந்தகூட்டத்தில் பேசினார்.அப்போது, தமிழகம் முழுவதையும் பொதிகையிலிருந்து புறப்படும் தென்றலாய்ஜெயலலிதா சுற்றி வந்துள்ளார். பொதிகையிலிருந்து புறப்படும் தென்றல்எதையெல்லாம் கொண்டு வரும் என்பது தெரியும்.
மறுபக்கம், அந்தத் தென்றலுக்கு எதிராக ஒரு புழுதிப் புயலும் தமிழகத்தை சுற்றிவந்துள்ளது. புழுதிப் புயலால் தூசிதான் பரவியுள்ளது.
ஜெயலலிதா ஒரு சுறுசுறுப்பான தேனீ. கருணாநிதியோ சுறுசுறுப்பான கொசு. தேனீ,தேனை சேமித்து வைக்கும், கொசுவோ ரத்தத்தை உறிஞ்சும்.
1980ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்ததும், மத்திய அரசை வலியுறுத்திஎம்.ஜி.ஆர். ஆட்சியைக் கவிழ்த்தார். தேர்தல் நடந்தது. முடிவு வரும் முன்பேகோட்டைக்கு செல்ல கார் தயாரானது.
பதவி ஏற்புக்கு நாளும் குறித்தார். வள்ளுவர் கோட்டத்தில் பதவி ஏற்பு விழாநடத்தவும் ஏற்பாடு ஆனது. ஆனால் இவையெல்லாம் கருணாநிதிக்கு கெட்டகனவாகிப் போனது.
இப்போதும் கோட்டைக்குப் போவோம் என்று நம்புகிறார். மே 8ம் தேதி என்னைகோட்டையிலே சந்தியுங்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications