அதிமுக தொல்லை: கார்த்திக் எச்சரிக்கை
திருநெல்வேலி:
அதிமுகவுக்கு நான் ஒரு துரோகமும் செய்யவில்லை. அப்படி இருந்தும் தொடர்ந்துபார்வர்ட் பிளாக் கட்சியை ஏன் அதிமுகவினர் தொல்லை தர வேண்டும் என்றுபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கோபமாக கேட்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் அதிமுகவால் பலஅவமானங்களை சந்தித்து விட்டேன். ஆனால் அரசியல் நாகரீகம் கருதி அவற்றைஎன்னால் வெளியில் சொல்ல முடியவில்லை, விரும்பவும் இல்லை.நான் அவமானப்படுத்தப்பட்டதை நினைத்து நான் கவலைப்படவில்லை.
முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி, மூக்கையாத் தேவர் ஆகியோர் கஷ்டப்பட்டுவளர்த்த பார்வர்ட் பிளாக் கட்சியையே ஜெயலலிதா அவமானப்படுத்தி விட்டார்.அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.
எங்களது வேட்பாளர்களை மிரட்டுவது இன்னும் தொடர்ந்து வருகிறது. அவர்களைகடத்துவது, மிரட்டுவது என்று தொடர்ந்து அதிமுகவினர் அட்டூழியம் செய்துவருகின்றனர்.
நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம், ஏன் இப்படி எங்களைத் துரத்தி துரத்திதொல்லை கொடுக்கிறீர்கள்? மேலும் தொடர்ந்து மிரட்டினால் போயஸ் தோட்டத்தில் நடந்தஅவமானத்தை என் சமூக மக்களிடம் சொல்ல வேண்டி வரும்.
எனது வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் யாரிடமும் விலைபோகவும் மாட்டேன். மக்கள் ஆதரவு எங்களுக்கு நிறையவே உள்ளது.
ஆண்டிப்பட்டியில் வேட்பாளரை பணம் கொடுத்தும், மிரட்டியும் வாபஸ் பெறவைத்து விட்டனர். அவர் எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்.
நான் நடிகன்தான். ஆனால் எனக்கும் அரசியல் தெரியும். எங்களுக்கு இடையூறுசெய்பவர்களுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் கார்த்திக்.
கார்த்திக்குடன் இருந்த தென் மாவட்ட பார்வர்ட் பிளாக் பிரமுகரான சேதுராமபாண்டின் கூறுகையில், போயஸ் கார்டனில் எங்களுக்கு மூன்றரை கோடி பணமும்மூணு சீட் தருவதாக சொன்னார்கள். நாங்கள் அதை வாங்க மறுத்துவிட்டோம் என்றார்.
கருணாநிதி சாதிக் கலவரத்தைத் தூண்ட சதி செய்வதாக வைகோ கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, சிறுத்தைகள்நடமாடலாம். சிங்கங்கள் நடமாடக் கூடாதா என்று அவர் சொன்னதை திரித்துக் கூறி அரசியல் லாபம் தேடமுயற்சிக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications