மன்மோகனை நம்பியே வாக்குறுதிகள்-கருணாநிதி
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங்கை நம்பித்தான் திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறுவாக்குறுதிகளை வழங்கியுள்ளோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை தீவுத் திடலில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கலந்து கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டிப் பேசினார். இக்கூட்டத்தில்கருணாநிதி பேசுகையில்,வரும் தேர்தல் யார் ஆட்சியைப் பிடிப்பது, யார் தோற்பது என்பதற்காக நடக்கும்போட்டி அல்ல. இது இரு தத்துவங்களுக்கு இடையிலான போட்டி.சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்.
இதில் ஜனநாயகம் வெல்ல வேண்டுமா இலலை சர்வாதிகாரம் வெல்ல வேண்டுமாஎன்பதை தமிழகத்தின் நீதிபதிகளாகிய வாக்காளர்கள் தீர்ப்பளிக்க உள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல வாக்குறுதிகள் பிரதமர் மன்மோகன்சிங்கை நம்பித்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்திட்டங்களை நிறைவேற்றக் கூடிய வரத்தை பிரதமரிடமிருந்து எப்படியும் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தத் தேர்தலில் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. பகையைத் தீர்த்துக் கொள்ளஇந்த தேர்தலை நாங்கள் சந்திக்கவில்லை. இது இரண்டு மன்னர்களுக்கு இடையேநடைபெறும் போரும் இல்லை.
பதவிகளுக்காக நான் அலைந்ததும் இல்லை. மக்களுக்குப் பணியாற்றும்வாய்ப்பாகவே எனக்கு தரப்படும் பதவியைக் கருதுகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications