ஊழலற்ற ஆட்சிக்கு திமுகவுக்கு ஓட்டு-மன்மோகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்இருப்பது போல தமிழகத்திலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சென்னை தீவுத் திடலில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு மன்மோகன்சிங் பேசினார். இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர்கள் ராஜா, தயாநிதி மாறன்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில்,

பண்பாடும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த மாநிலம் தமிழகம்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரியவெற்றியைக் கொடுத்தது மத்தியில் மதசார்பில்லாத அரசு அமைய காரணமாகஇருந்தது தமிழகம்.

அதே போல தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஊழலற்ற ஆட்சிஅமைய சட்டசபைத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடித் தர வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்தால் எனக்கு அந்த நம்பிக்கைவருகிறது.

தொலைநோக்குப் பார்வையுடன் காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் நடைபோட்டுவருகிறது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றுவதில்தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர்.

தமிழர்கள் பெருமைப்படத்தக்க மாநிலமாக தமிழகத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் முக்கியத் துறைகளை தங்கம்வசம் வைத்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள்.

அவர்கள் மிகச் சிறந்த திறமைசாலிகளாக விளங்குகிறார்கள். இவர்களால் நாடும்,தமிழ்நாடும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.

அனுபவமும் திறமையும் மிக்க ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருக்கிறார். டி.ஆர்.பாலுவின் முயற்சியால்தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் 4 வழிச் சாலைகளாக தரம்உயர்த்தப்பட்டு வருகின்றன.

இளையவரும், என் இனிய நண்பரும், துடிப்பு மிக்கவருமான தயாநிதி மாறனின்முயற்சியால் இன்று தொலைத் தொடர்புத்துறையில் சாதனைகள் நடந்து வருகின்றன.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரூபாயில் தொலைபேசியில் பேச வகைசெய்தவர் தயாநிதி மாறன்.

மேலும் அவரது முயற்சியால் தான் இன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தமிழகத்தில் கோடிக்கணக்கான முதலீடுகளை செய்து வருகின்றன.

அதே போல இளம் அமைச்சர் அன்புமணியும் ஊரக நலத் திட்டத்தை முழு மூச்சாகஅமல்படுத்தி கிராமப் புற சுகாதாரத்துக்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

வாசன், இளங்கோவன், ராஜா போன்ற இளையவர்களும் நாட்டுக்காகவும்தமிழகத்துக்காகவும் உழைக்கும் ஆட்கள்.

கருணாநிதியின் வழிகாட்டுதலில் அமைந்துள்ள எனது அரசு தமிழக மக்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியது. இதனால் தமிழக கடல்பகுதிகள் இன்னும் சில ஆண்டுகளில் வரலாறு காணாத மாற்றத்தை, வளர்ச்சியைஅடையப் போகின்றன.

தமிழகத்தில் சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.6,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.

சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் வந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டசமயத்திலும் மத்திய அரசு உடனடியாக உதவியது.

மத்தியில் உள்ளதைப் போன்றே தமிழகத்திலும் திமுக ஆட்சி இருந்தால் இன்னும்மிகச் சிறப்பான வளர்ச்சிப் பாதையில மாநிலத்தை இட்டுச் செல்ல முடியும்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி அதன் பெருமையை நிலைநாட்டினோம்.

முன்னதாக திருச்சியில் நடைபெற்ற பிரமாண்டக் கூட்டத்திலும் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+