விருத்தாச்சலம் விறுவிறு-ராமதாஸ் Vs
விருத்தாச்சலம்:
வேடதாரிகள் (விஜயகாந்த்!) மயக்க பிஸ்கட் கொடுத்து விருத்தாச்சலம் மக்களைஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் விருத்தாசலம் அவர்களிடம் ஏமாறாது என்று பாமகநிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விருத்தாசலத்தில் விஜய்காந்த் கடும் போட்டியை உருவாக்கியுள்ளார். முதலில் இதைபாமக நம்பவில்லை. ஆனால், அவருக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதைஇப்போது அக் கட்சி உணர்ந்து கொண்டுவிட்டது.இதையடுத்து ராமதாஸ் நேரடியாக களமிறங்கியுள்ளார். வழக்கமாக மாலைக்கு மேல்தான் பிரச்சாரம் செய்வார் ராமதாஸ். ஆனால், விருதாசலத்தில் காலையிலேயேபிரச்சாரத்தை ஆரம்பித்துவிடுகிறார்.
தெருக்களில் சேர் போட்டு அமரும் ராமதாஸ், அப் பகுதியினரை குடும்பம்குடும்பமாக சந்திக்கிறார்.
விஜய்காந்த் ஒரு கூத்தாடி, கூத்தாடிகள் நம் ஊருக்கு வந்து ஆடிப் படி நம்மைமகிழ்விப்பார்கள். நாமும் அவர்களுக்கு சோறு போட்டு திருப்பி அனுப்பிவைப்போம். ஆனால், இங்கேயே நிரந்தரமாக தங்க வைப்போமா? மாட்டோம்.
அது மாதிரி தான் விஜய்காந்த். இங்கு வந்திருக்கிறார். வந்தது சரி. ஆனால்,நிரந்தரமாக இங்கே அவரை நாம் தங்க வைத்துவிடக் கூடாது. நான் சொல்றது புரியுதாஎன்று பேசும் ராமதாஸ், பாமக வேட்பாளர் கோவிந்தசாமியைக் காட்டி, இவருக்குபோடும் ஓட்டு, எனது நண்பர் கருணாநிதி ஆட்சி அமைக்க போடும் ஓட்டு.. சரியாஎன்கிறார்.
ஆனால், அவர் போன பின்னர் தேமுதிகவினர் வந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவும் ராமதாஸ் பாணியிலேயே மிகவும் நெருங்கிபிரச்சாரம் செய்கிறார்.
ராமதாஸ் தெருவில் சேர் போட்டு உட்கார்ந்தால், பிரேமலதா வீடுகளுக்குள் புகுந்துபெண்களின் கையைப் பிடித்துக் கொண்டு, அவருக்கு ஓட்டு போடுங்க. இந்தப்பகுதியை அப்படியே மாத்திக் காட்டுவார். சொந்தக் காசில் இன்ஜினியரிங் காலேஜ்கூட உருவாக்குவோம் என்று வீட்டில் இருக்கும் இளையவர்களைப் பார்த்துபேசிவிட்டுப் போகிறார்.
இந்தத் தொகுதியில் கூட்டணி தர்மத்தையும் மீறி அதிமுகவுக்கு ஆதரவில்லை என்றுசொல்லிவிட்டார் திருமாவளவன். அவரது தொண்டர்கள் பாமகவுக்குவாக்களிக்குமாறு தலித் மக்களிடையே தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் ராமதாஸ்பேசுகையில்,
சில வேடதாரிகள் சென்னையிலிருந்து இங்கு வந்து விருத்தாச்சலம் மக்களை மயக்கபிஸ்கட் கொடுப்பது போல பேசி ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
ஆனால் அவர்களது ஏமாற்று வேலைக்கு நமது இளைஞர்கள் மயங்க மாட்டார்கள்.அவர்கள் அறிவாளிகள், தொழில், படிப்பில் ஆர்வம் காட்டக் கூடியவர்கள்.
புதிதாக வெளியிலிருந்து வந்துள்ள வேடதாரிகளிடம் ஏமாந்து விட மாட்டார்கள்.அவர்களது வேடத்தைக் கலைத்து அனுப்பும் நாள் மே 8ம்தேதி.
எதுவுமே இல்லாமல் நேற்று கட்சி ஆரம்பித்து இன்று பதவி நாற்காலியைப் பிடித்துவிடலாம் என வெளியே இருந்து இங்கே வந்து வேஷம் போடுபவர்களை இந்தமண்ணின் சொந்தங்கள் ஆதரிக்கலாமா என்பதை சிந்தித்து செயல்படுங்கள் என்றார்ராமதாஸ்.
இரு தரப்புமே வாக்காளர்களை கவர்ந்து இழுக்க பெரும் பாடு படும் நிலையில்அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை உளவுத் துறையை விட்டுத் தான் தேடவேண்டும் போலிருக்கிறது. ஆள் அட்ரஸையே காணோம்..
தேர்தலில் மூன்றாவது இடம் யாருக்கு என்று ஒரு போட்டி வைத்தால் அதில்அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்கள் அக் கட்சியினரே.












Click it and Unblock the Notifications