தேர்தலுக்கு பின் திமுக இருக்காது-சரத் ஜோசியம்
Subscribe to Oneindia Tamil
உடுமலைப்பேட்டை:
தேர்தலுக்குப் பின் திமுக இருக்காது என்று சரத்குமார் கூறினார்.
உடுமலையில் நிருபர்களிடம் பேசிய சரத்,கருத்துக் கணிப்பு வேறு, எழுச்சி வேறு. கருத்துக் கணிப்பில் ஆயிரம் பேரிடம் கேட்போம். அதில் சிலர்மனதுக்குள் உள்ளதை மாற்றிச் சொல்வார்கள்.
தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது அதிமுகவுக்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்வகையில் வெற்றி கிடைக்கும். 200 இடங்களில் ஜெயிப்போம்.
தயாநிதி சர்வாதிகாரியாக செயல்படுகிறார். அவரை மக்கள் இத்துடன் ஒதுக்கிவிடுவார்கள். டாடாவை மிரட்டியவிவகாரம் நிரூபிக்கப்படப் போகிறது. அப்போது தயாநிதி ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வரும். இப்போதுஒரு வாரப் பத்திரிக்கையை தயாநிதி வாங்கியுள்ளார்.
கருணாநிதியை அரசியல் ஞானி என்கிறார்கள். ஆனால், அவர் மிருக ஜாதி என்று சொல்லி ஜாதிக் கலவரத்தைத்தூண்டுகிறார்.
தேர்தலுக்குப் பின் திமுக இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications