சசியை பகைத்ததால் தான் பண்ணையார் கொல்லப்பட்டார்: இன்பத்தமிழன்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பகைத்துக் கொண்டதால்தான்வெங்கடேஷ் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று முன்னாள் அமைச்சர்இன்பத் தமிழன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவிய இன்பத் தமிழன் ஸ்ரீவில்லிபுத்தூரில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,சொந்த நலனைத் தவிர வேறு எது குறித்தம் சிந்திக்காதவர் ஜெயலலிதா. அவரையாருமே நேரில் சந்திக்க முடியாது. அது அமைச்சராக இருந்தாலும் சரி.
இதனால்தான் தமிழகத்தின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போனது.அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் வெறும் பொம்மைகள் தான்.
நாடார் சமுதாயத்தினர் மத்தியில் செல்வாக்கு பெற்ற வெங்கடேஷ் பண்ணையாரின்வளர்ச்சி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு பிடிக்கவில்லை.
இதனால் அவரை மிரட்டி தங்களுக்கு ஆதரவாக செயல்படும்படி மிரட்டினர். ஆனால்அதற்குப் பணிய பண்ணையார் மறுத்து விட்டார்.
இதனால்தான் பண்ணையாரை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்றார் இன்பத் தமிழன்.












Click it and Unblock the Notifications