சத்யபாமா கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டம்- தீ வைப்பு
திருப்போரூர்:
சென்னை சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கல்லூரித் தலைவரின் அறையை உடைத்து மாணவர்கள் தீ வைத்தர். அதே போல விடுதியில் உள்ள படுக்கைகள்,மெத்தைகள், இருக்கைகளுக்கும் தீ வைத்தனர்.மேலும் கல்லூரியின் மாநாட்டு அரங்கத்துக்கும் மாணவர்கள் தீ வைத்தனர். கல்லூரியின் கண்ணாடிஜன்னல்களையும் கல்வீசித் தாக்கி உடைத்தனர்.
இந்த பல்கலைக்கழத்துக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரம் கிடைக்காததால் தங்கள்எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறி மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் குதித்தனர்.
தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது. சில நாட்களுக்குமுன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டது.
இதையடுத்து வரும் 7ம் தேதிக்குள் கல்விக் கட்டணத்தைக் கட்டுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாகத்தெரிகிறது. 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள்விடுத்த கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கல்லூரித் தலைவரின் அறையை உடைத்துரகளை செய்த மாணவர்கள் அதற்கு தீ வைத்தர்.
விடுதியில் உள்ள படுக்கைகள், மெத்தைகள், இருக்கைகளுக்கும் தீ வைத்ததோடு கல்லூரியின் மாநாட்டுஅரங்கத்துக்கு தீ வைத்தனர்.
இதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தாம்பரம், கிண்டி, திருவான்மியூரில் இருந்துதீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து ஏ.சி. ஆறுமுகசாமி தலைமையில் போலீஸ்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து இன்று மீண்டும் கல்லூரி மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications