For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமது அணி ஜெயிக்கப் போவது உறுதி: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

பிரச்சாரம் முடிஞ்சு போச்சு. நமது அணி ஜெயிக்கப் போவது உறுதி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.

சிவகாசியில் பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

மலர்ந்த முகங்களோடும், மகிழ்ச்சி ததும்பும் இதயங்களோடும் திரண்டு நிற்கும் உங்கள் முன் பேசும் வாய்ப்பைப்பெற்றுள்ளேன். இந்தக் கூட்டத்தை ஜெயா டிவியில் நேரடியாகக் காட்ட முடியாது. அதற்கான டைரக்ட்டெலிபோர்ட் லைசென்ஸ் இல்லை.

அந்த லைசென்ஸ் பெறுவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறது ஜெயா டிவி. இன்னும் அனுமதிதரவில்லை. ஆனால், மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி (தயாநிதி) தனது அதிகாரத்தைப் பயன்படுத்திதனது குடும்பத் தொலைக்காட்சிக்கு மட்டும் நேரடியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப 10 வண்டிகளுக்கு அனுமதிகொடுத்துள்ளார்.

இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா.?

அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு கூடும் கூட்டம் வெறும் 500 பேர் தான். ஆனால், அதை கிரேன் மூலம் படம் பிடித்துமந்திர தந்திர மாயாஜால வேலைகள் செய்து கிராபிக்ஸ் மூலம் பெரும் கூட்டம் போல காட்டுகிறார்கள்.

கருணாநிதி பேரன் குடும்பத்தினரிடம் 80 லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு ரூ.800 கோடி வருமானம் கிடைக்கிறது.

இப்போது கருணாநிதி டிவி கொடுப்பதாகக் கூறியுள்ளது எதற்காகத் தெரியுமா?. மக்கள் வரிப்பணத்தில் டிவிவாங்கித் தந்துவிட்டு அதன் மூலம் தனது குடும்பத்துக்கு மேலும் 500 கோடி ரூபாயை சம்பாதிக்கத்தான்.

அனைவரும் குறைந்த கட்டணத்தில் டிவி பார்க்க நமது முதல்வர் கேபிள் டிவியை அரசுடமையாக்கும் சட்டத்தைகொண்டு வந்தார். மக்கள் எல்லாம் அதை வரவேற்றார்கள். ஆனால், தனது படை பரிவாரங்களுடன் கவர்னரைசந்திக்க கருணாநிதி அந்த சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடக் கூடாது என்று கவர்னரை பிளாக் மெயில்செய்தார்.

தமிழகம் முழுவதும் சுற்றி வந்துவிட்டேன். புரட்சித் தலைவி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள்ஒட்டுமொத்தமாக முடிவு செய்துவிட்டார்கள்.

பிரச்சாரம் முடிஞ்சு போச்சு. நமது அணி ஜெயிக்கப் போவது உறுதி என்றார் வைகோ.

வைகோ வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்:

இதற்கிடையே தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ரூ. 1 கோடி நஷ்ட தரக் கோரி மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை 3 முறை வைகோ வாங்கமறுத்ததையடுத்து அதை நீதிமன்ற அமீனா வைகோவின் வீட்டில் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X