நான் யார் என்பதை நிரூபிப்பேன்: விஜயகாந்த்
கடலூர்:
எனக்கு எதிராக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நான் யார்என்பதை மே 11ம் தேதிக்குப் பின்னர் நிரூபிப்பேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறிஉள்ளார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடந்த தேசிய முற்போக்கு திராவிட கழக பிரசாரக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,நான் நடித்த முதல் படமான தூரத்து இடிழககம் கடலூர் பகுதியில் தான்எடுக்கப்பட்டது. அந்தப் படம் வெற்றி பெற்று என்னை ஒரு நடிகனாக மாற்றியது.அந்த நம்பிக்கையில்தான் கடலூர் மாவட்டத்திலும் எனது வேட்பாளர்களைநிறுத்தியுள்ளேன்.
இதுவரை 31,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து விட்டேன். எங்கும்மக்கள் மனதில் நிம்மதி இல்லை, யாருமே சந்தோஷமாக இல்லை. கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கஷ்டங்கள் இவை.
எங்குமே நல்ல சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின் வசதி இல்லை, இப்படிபல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாகத கிராமங்கள நூற்றுக்கணக்கில்உள்ளன.
அந்த மக்களின் கஷ்டத்தை கடந்த காலங்களில் ஆண்டவர்கள போக்கவில்லை. நான்அதை சரி செய்யப் போகிறேன். எனக்கு இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்புகொடுத்துப் பாருங்கள்.
நான் ஒரே ஒரு தேர்தல் அறிக்கையைத்தான் வெளியிட்டேன். அதில் எந்த மாற்றமம்இல்லை. இலவச அரிசியை நான்தான் முதலில் அறிவித்தேன்.
ஆனால் எனது தேர்தல் அறிக்கை காப்பி அடித்து இப்போது மற்ற கட்சிகள் தினசரி ஒருதேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். மின்சார இணைப்பைத்துண்டிக்கிறார்கள், கொடிகள, பேனர்களை அகற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம்நான் யார் என்பதை மே 8ம் தேதியும், 11ம் தேதியும் நிரூபிப்பேன் என்றார்விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications