For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணிக்கு 167 இடங்கள்: ஐபிஎன்-இந்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்குவெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணிக்கு 167 இடங்கள் வரை கிடைக்கும் என

சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சி மற்றும் த இந்து நாளிதழ் ஆகியவை சிஎஸ்டிஎஸ்நிறுவனத்துடன் இணைந்து நடத்திய நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதன் விவரம்:

திமுகவுக்கு 45%, அதிமுகவுக்கு 35%:

திமுக கூட்டணிக்கு 45 சதவீத ஆதரவும், அதிமுக கூட்டணிக்கு 35 சதவீத ஆதரவும்கிடைத்துள்ளது.

அதே போல விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு 10 சதவீதவாக்குகள் கிடைக்கக் கூடும்.

பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்டோர் மொத்தமாக 10 சதவீதவாக்குகளைப் பெறலாம்.

இதன் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு 157 முதல் 167 தொகுதிகள் வரையும்,அதிமுக கூட்டணிக்கு 64 முதல் 74 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும். மற்றவர்கள் 2முதல் 6 தொகுதிகளில் வெல்லக் கூடும்.

சிறந்த முதல்வர் யார்?:

சிறந்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதிதான் சிறந்த முதல்வர் என 41சதவீதம் பேரும், ஜெயலலிதாவின் பெயரை 35 சதவீதம் பேரும், விஜயகாந்த் என 10சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு 1 சதவீத வாக்காளர்களே ஆதரவுதெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக தீவிர அரசியலில் இருக்கும் ஸ்டாலினை விட மிகப் பெரியஆதரவை, அரசியலில் முதல் முறையாக அடியெடுத்து வைத்திருக்கும் விஜயகாந்த்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருமா?

ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு 54சதவீதம் பேர் வாய்ப்பே இல்லை என்றும், 39 சதவீதம் பேர் அமையும் என்றும், 7சதவீதம் பேர் தெரியாது என்றும் பதிலளித்தனர்.

திமுக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்கும்என்றாலும் கூட திகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு என்று இந்த எக்சிட் போல் தெரிவிக்கிறது.

கடந்த 1957ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தலில் இப்படி ஒருநெருக்கடி ஏற்பட்டதில்லை. திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், தமிழகத்தில்முதல் முறையாக தொங்கு சட்டசபை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு மிகப் பெரியவெற்றியையும் கொடுத்து விடவில்லை. காரணம், திமுக, அதிமுக அணிகளுக்குஇடையிலான வாக்கு வித்தியாசம் 10 சதவீதம்தான்.

இது கடந்த 1996ம் ஆண்டு தேர்தலின்போது 22 சதவீதமாகவும், 2001ம் ஆண்டுதேர்தலில் 19 சதவீதமாகவும் இருந்தது.

பாமக, மதிமுக செல்வாக்கு சரிவு:

பாமக மற்றும் மதிமுகவின் செல்வாக்கில் பெரும் ஓட்டை விழுந்திருக்கிறது. வடமாவட்டங்களில் பலம் வாய்ந்த பாமக, இம்முறை திமுக கூட்டணிக்கு பெரியஅளவில் உதவப் போவதில்லை.

மாறாக, இப்பகுதிகளில் அதிமுக அதிக லாபம் ஈட்டியுள்ளது. திமுக கூட்டணியில்இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களதுபலத்தால் திமுகவுக்கு உதவியுள்ளன.

அதேபோல தென் மாவட்டங்களில் அதிமுக அதிகம் நம்பியிருந்த மதிமுகவும் கைவிட்டு விட்டது. அக்கட்சியால் அதிமுக அணிக்கு லாபமே இல்லை. வைகோவால்அதிமுகவுக்கு பலனே இல்லை.

மதிமுகவுக்கு ஏற்கனவே இருந்து வந்த செல்வாக்கிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் திமுக:

அதே நேரத்தில் அதிமுகவின் கோட்டையாக விளங்கிய தென் மாவட்டங்களில் திமுகஇம்முறை வலுவாக ஊடுருவிவிட்டது.

தென் மாவட்டங்களிலும் காவிரி பாசனப் பகுதிகளிலும் மற்றும் கோவை உள்ளிட்டமேற்கு மாவட்டங்களிலும் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இங்கு அதிமுகவை திமுக புரட்டிப் போட்டுள்ளது.

புதிய உதயம் - விஜயகாந்த்:

இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ள புதிய விஷயம், விஜயகாந்த்கட்சியின் எழுச்சிதான்.

இக்கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதேசமயம், இந்தவாக்குகள் அனைத்தும் சரிவிகித அளவில் அனைத்துத் தொகுதிகளிலும் பரவலாகஇருக்கும் என்பதால் அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை விஜயகாந்த் கட்சியால் வெல்லமுடியும்.

புரொடெஸ்ட் ஓட்:

விஜய்காந்துக்குக்குக் கிடைத்துள்ள வாக்குகளை புரொடஸ்ட் ஓட் என்கிறது எக்சிட் போலை முன்னின்று நடத்திய சிஎஸ்டிஎஸ் நிறுவனம்.

திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், அந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளையும் ஆதரிக்க விரும்பாதவர்கள் தான்விஜய்காந்துக்கு வாக்களித்துள்ளனர்.

இதனால் இது விஜய்காந்துக்குக் கிடைத்துள்ள செல்வாக்கு என்பதை விட திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை அள்ள மாற்று சக்திஇல்லாததால் அவை விஜய்காந்துக்குப் போயுள்ளன என்று தெரிய வந்துள்ளது.

பாஜகவுக்கு முட்டை :

பாஜக மற்றும் பிற கட்சிகள் மொத்தமாக 10 சதவீத வாக்குகளைப் பெறும். ஆனால் கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.

மொத்தம் 77 தொகுதிகளில் இந்த எக்ஸிட் போல் நடத்தப்பட்டது. இதில் மைலாப்பூர் தொகுதியில் நடந்த கணிப்பு முடிவுகளில் தவறு ஏற்பட்டதால் அதுநீக்கப்பட்ட விட்டது.

314 வாக்குச் சாவடிகளில், மொத்தம் 11,394 பேரிடம் எக்சிட் போல் நடத்தப்பட்டது.

இதில் 45 சதவீதம் பேர் பெண்கள். 7 சதவீதம் பேர் முஸ்லீம்கள், 8 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், 27 சதவீதம் பேர் தலித்துகள். மொத்தத்தில் 67சதவீதம் பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

திமுகவுக்கு பிராமணர்கள் ஆதரவு:

வழக்கத்துக்கு விரோதமாக திமுகவுக்கு இம்முறை அதிகமான பிராமணர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாகசங்கராச்சாரியாரின் கைது கருதப்படுகிறது.

அதே போல முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளையும் அதிமுக இழந்துள்ளது. அதிமுகவுக்கு 42 சதவீதத்தினரும் திமுகவுக்கு 41 சதவீத முக்குலத்தோரும்ஆதரவு தந்துள்ளனர்.

வழக்கமாக 70 சதவீத முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கே கிடைப்பதுண்டு. இம்முறை இரு கட்சிகளுமே கிட்டத்தட்ட சரி சமமான அளவில்இந்த சமூகத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர். இதனால் தான் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவுக்குஅதிக வெற்றி கிடைக்கவுள்ளது.

அதே போல நாடார்கள், கவுண்டர்கள், வன்னியர்கள் ஆகியோரின் வாக்கும் திமுகவுக்கே அதிகம் கிடைத்துள்ளன.

தலித்களில் பறையர் பிரிவினர் திமுகவுக்கு அதிக ஆதரவு அளித்துள்ளனர். சக்கிலியர்கள் பிரிவு தலித்துகள் ஆதரவு அதிமுகவுக்கே அதிகம் கிடைத்துள்ளது.

முஸ்லீம்கள், கிருஸ்துவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் திமுகவையே ஆதரித்துள்ளனர்.

பெண்கள் மத்தியில் அதிமுக முன்னிலை:

படித்தவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் திமுகவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிமுகவையேஅதிகம் ஆதரித்துள்ளனர்.

கிராமப் பகுதிகளிலும் பெண்கள் மத்தியிலும் அதிமுகவுக்கே திமுகவை விட கூடுதல் ஆதரவு உள்ளது. ஆனால், ஆண்கள் பெருமளவில் திமுகவைஆதரித்துள்ளனர்.

இவ்வாறு இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

சிஎன்என்- ஐபிஎன் மற்றும் த இந்து நாளிதழ் ஆகியவை இணைந்து ஏப்ரலில் நடத்திய கருத்துக் கணிப்பில் இரு கூட்டணிகளுமே சரி சமமான அளவில் இருப்பதுதெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் நிலைமை உல்டாவாகியுள்ளது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி முன்னின்று நடத்திய மிகத் தீவிரமான பிரச்சாரமேகாரணம் என சிஎஸ்டிஎஸ் அமைப்பின் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X