For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழகம் சாதனை44 பேர் வெற்றி- மண்டலால் கிடைத்த பயன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிவில் சர்வீஸ் எனப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 44பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 47 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் தேசிய அளவில் 4வது இடத்தைப்பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு வருடா வருடம் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. 2005ம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு 15ம் தேதிநடந்தது.

இதில் வெற்றி பெற்றவர்கள் 6,000 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வாகினர். அவர்களில்320 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த அக்டோபர் மாதம் மெயின் தேர்வு நடந்தது. இதில் 1,174 பேர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 142 பேர்.

இந் நிலையில் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 425 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 44 பேர் ஆவர். இதன்மூலம் சிவில் சர்வீஸ் பதவிக்கு கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்துதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 44 பேரில் 12 பேர் ஐஏஎஸ் பணிக்கும், 8 பேர் ஐபிஎஸ் பணிக்கும் மற்றவர்கள்மத்திய அரசின் குரூப் ஏ, பி பணிகளுக்கும் தேர்வாவார்கள் என்று தெரிகிறது.

அகில இந்திய அளவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மோனா ப்ரீத்தி என்ற பெண்முதலிடம் பெற்றுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த கணேசன் 4வது இடத்தைப்பிடித்துள்ளார்.

9 பேர் தமிழ்ப் பெண்கள்:

திருச்சியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுசாதனை படைத்துள்ளார். இவருக்கு அகில இந்திய அளவில் 350வது ரேங்க்கிடைத்துள்ளது. தமிழகத்திலிருந்து தேர்வு ஆன 44 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர்.

லாரி டிரைவர் மகன்:

தமிழில் தேர்வு எழுதிய நந்தகுமார் லாரி டிரைவரின் மகன் ஆவார். முக்கியத்தேர்வுகளை தமிழில் எழுதிய நந்தகுமார், நேர்முகத் தேர்வை மட்டும் ஆங்கிலத்தில்சந்தித்தார்.

தற்போது மிகவும் குறைந்த ரேங்க் கிடைத்துள்ளதால், அவரால் ஐ.ஏ.எஸ். பணிக்குச்செல்ல முடியாது. வேறு சிவில் சர்வீஸ் பணிதான் கிடைக்கும். எனவே மீண்டும் தேர்வுஎழுதப் போவதாக கூறியுள்ளார் நந்தகுமார்.

மண்டல் கமிஷனால் கிடைத்த பயன்:

1991ல் அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரை காரணமாகவே தமிழகத்தில்இருந்து அதிக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் தேர்வாகிவருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 49 இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் வி.பி.சிங். இதனால் ரதயாத்திரையை ஆரம்பித்து அவரது பதவியையை கவிழ்த்தார் அத்வானி என்பதுநினைவுகூறத்தக்கது.

ஆனால், அந்த மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக ஆரம்பித்ததன் பலனை தமிழகம்உள்பட நாடு முழுவதும் உள்ள பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனுபவிக்கஆரம்பித்துவிட்டனர்.

குறிப்பாக தமிழகத்தின் கிராமப் பகுதியில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில்வெல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆண்டாண்டு காலமாய் சாதியரீதியில் ஒடுக்கப்பட்டு, அதனால் கல்வி கற்க வாய்ப்பும்மறுக்கப்பட்டவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சியடைவது குதிரைக் கொம்பாகஇருந்தது.

இந்த நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது மண்டல் கமிஷன். இப்போதுதமிழகத்தில் இருந்து சராசரியாக 45 பேர் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில்வெல்ல ஆரம்பித்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஆவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X