For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் அறிக்கை வெற்றி-தயாரித்தவர் தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக கூட்டணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த திமுகவின் தேர்தல் அறிக்கையைத்தயாரித்த பேராசிரியர் நாகநாதன், தான் போட்டியிட்ட திருவல்லிக்கேணி தொகுதியில்தோல்வியைத் தழுவியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு அதிமுகவின் கையே மக்கள் மத்தியில்ஓங்கியிருந்தது. ஆனால் திடீரென திமுக கூட்டணிக்கு சாதகமாக மக்கள் திரும்பமுக்கியக் காரணம், திமுகவின் அட்டகாசமான தேர்தல் அறிக்கைதான்.

அதில் கூறப்பட்டிருந்த 2 ரூபாய்க்கி அரிசி, கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், விவசாயிகளின்கடன்கள் தள்ளுபடி ஆகிய அறிவிப்புகள் மக்களை வெகுவாக ஈர்த்தன. குறிப்பாககலர் டிவிதான் மக்களை மயக்கி விட்டது.

இந்த தேர்தல் அறிக்கைதான் திமுக கூட்டணிக்கு 163 இடங்களை வென்றுகொடுத்தது, அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப பெரும் உதவியாக இருந்தது.

அப்படிப்பட்ட தேர்தல் அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தவர் பேராசிரியர்நாகநிாதன். இவர் சென்னை பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர்.

தனது பதியை ராஜினாமா செய்து விட்டு திருவல்லிக்கேணி தொகுதியில்போட்டியிட்டார் நாகநிாதன்.

நாகநாதன் தயாரித்துக் கொடுத்த தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் அமோகஆதரவைப் பெற்று திமுக கூட்டணிக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்த அதேநேரத்தில் நாகநாதனுக்கு தோல்வியைக் கொடுத்து விட்டது திருவல்லிக்கேணி.

இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவின் தோழியான அதிமுகவின் பதர் சயீத்திடம்தோற்றுப் போனார் நாகநாதன்.

பதர் சயீத், ஜெயலலிதாவின் பள்ளிக்கூட தோழி. அதேபோல திமுக தலைவர்கருணாநிதியின் நெருங்கிய நண்பர் நாகநாதன். கருணாநிதி தினசரி காலையில்,அண்ணா அறிவாலயத்தில் நடைபயணம் மேற்கொள்ளும்போது நாகநாதனும் உடன்செல்வார்.

14 ஓட்டில் ஐஎன்டியூசி வெற்றி:

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அதிமுககூட்டணியின் ஐ.என்.டி.யூ.சி வேட்பாளர் சின்னச்சாமிதான் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சின்னச்சாமி இரட்டை இலைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டார். அவருக்கு 1,00,283வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர்செளந்தரராஜனுக்கு 1,00,269 வாக்குகள் கிடைத்தன. இதனால் வெறும் 14 ஓட்டுக்கள்வித்தியாசத்தில் சின்னச்சாமி வெற்றி பெற்றார்.

அதிக வித்தியாசத்தில் வெற்றி:

இந்தத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளவர் தாம்பரம்தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா.

இவர் 48,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதன் முதலாகசட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவர் ராஜா.

தாம்பரம் தான் தமிழகத்தின் 2வது பெரிய தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X