For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சரவை நிறைய ஸ்டாலின் ஆதரவாளர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பதவியேற்கவுள்ள திமுகவின் புதிய அமைச்சரவையில் இடம் பெறவுள்ள 30 பேரில்19 பேர் புதியவர்கள். மற்றவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த அனுபவம்கொண்டவர்கள்.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் விவரம்:

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்: கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர்.கடந்த முறையே அமைச்சர் பதவியைக் கோரினார் பி.டி.ஆர். ஆனால்அவரைசபாநாயராக்கிவிட்டார் கருணாநிதி. தற்போது தான் முதன் முதலாக அமைச்சர்பதவியைப் பிடித்துள்ளார். அவருக்கு சட்டத் துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

மு.க.ஸ்டாலின்: திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வரைஉயர்ந்துள்ள ஸ்டாலின் இப்போது தான் முதல் முறையாக அமைச்சர் பொறுப்பைஏற்கிறார். வருங்கால முதல்வர் என்று திமுகவினரால் அழைக்கப்படும் ஸ்டாலினுக்குஅதற்கான முதல் படிதான் இந்த அமைச்சர் பதவி.

பரிதி இளம்வழுதி: கடந்த திமுக ஆட்சியின்போது துணை சபாநாயகராக இருந்தவர்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பரிதி கடந்த முறையே அமைச்சர் பதவியைஎதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில்இருக்கும்போதெல்லாம் ஜெயலலிதாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்.அசாத்தியமான திறமைசாலி, சிறந்த பேச்சாளர். ஸ்டாலினின் தளபதி. கருணாநிதி தவிரமாறன் குடும்பத்து அன்பையும் பெற்றவர். அதற்குப் பரிசாக இப்போது அமைச்சர்பதவி அவருக்குக் கிடைத்துள்ளது.

ஏ.வி.வேலு: தண்டாரம்பட்டு வேலு என்று அழைக்கப்படும் வேலுவுக்கு கல்விநிலையங்கள் உள்ளன. செம துட்டி பார்ட்டி. ஸ்டாலினின் வலதுகரம்.

சுப .தங்கவேலன்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தொகுதியிலிருந்து வெற்றிபெற்றுள்ள சுப. தங்கவேலன் முதல் முறையாக அமைச்சர் பொறுப்புக்குஉயர்ந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட திமுகவின் முக்கிய புள்ளி. தனிப்பட்ட மக்கள்செல்வாக்கு உடையவர். கருணாநிதி பற்றாளர்.

தா.மோ. அன்பரசன்: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாராக இருக்கும் தா.மோஅன்பரசன், குன்றத்தூர் நகராட்சித் தலைவராகவும் இருக்கிறார். ஸ்டாலினின் தீவிரவிசுவாசி. ஆலந்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் அராஜகத்தைஎல்லாம் தாண்டி வெற்றிக் கனி பறித்தவர். அதனால் அவருக்கு அமைச்சர் பதவிக்கானயோகம் அடித்துள்ளது.

பெரியகருப்பன்: சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர். திருப்பத்தூர்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த திமுகவிஐபி.

என்.கே.கே.பி.ராஜா: ஈரோடு தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் ராஜா. முன்னாள்அமைச்சர் என்.கே. பெரிசாமியின் புதல்வர். ஸ்டாலின் ஆதரவாளர்.

தங்கம் தென்னரசு: முன்னாள் அமைச்சர் தென்னரசுவின் மகன் தங்கம் தென்னரசு.அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தங்கம் தென்னரசுவும் ஸ்டாலின்ஆதரவாளரே.

உபயதுல்லா: தஞ்சை பகுதியில் மூத்த திமுக தலைவர். முதல் முறையாகஅமைச்சராகிறார். தீவிரமான கருணாநிதி விசுவாசி.

மொய்தீன்கான்: பாளையங்கோட்டை தொகுதியில் கடைசி நிமிடத்தில்வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மொய்தீன்கான். இப்போது அமைச்சராகவும்உயர்ந்திருக்கிறார்.

செல்வராஜ்: முசிறி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராஜுக்குஸ்டாலினே எல்லாம்.

சாமிநாதன்: வெள்ளக்கோவில் தொகுதியில் மதிமுக ஹெவி வெயிட் தலைவர்களில்ஒருவரான கணேசமூர்த்தியை புரட்டிப் போட்டு வென்றவர். அதற்கான பரிசாகஅமைச்சராகிவிட்டார்.

கீதா ஜீவன்: கலைஞரின் முரட்டு பக்தர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டதிமுக செயலாளர் பெரியசாமியின் மகள். தந்தைக்குக் கூட கிடைக்காத அமைச்சர்வாய்ப்பு கீதாவுக்குக் கிடைத்துள்ளது.

பூங்கோதை ஆலடி அருணா: படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர்ஆலடி அருணாவின் மகள். ஆலங்குளம் தொகுதியில் வென்றுள்ள பூங்கோதை ஒருடாக்டர். சென்னையில் வசிக்கும் இவர் இப்போது அமைச்சராக உயர்ந்துள்ளார்.

தமிழரசி: தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மதுரை சமயநல்லூர் தொகுதியில்கடும் போட்டியில் ஜெயித்து எம்எல்ஏ ஆனவர். கட்சியின் தீவிர விசுவாசி.

கே.பி.பி.சாமி: திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டவர். ஸ்டாலின் ஆதரவாளர்.

மதிவாணன்: திருவாரூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். கருணாநிதியின்சொந்த மண்ணைச் சேர்ந்தவருக்கு அடித்தது அமைச்சர் பதவி.

ராமச்சந்திரன்: நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர்மில்லரைத் தோற்கடித்தவர்.

சென்னைக்கு 5 அமைச்சர்கள்:கருணாநிதி தலைமையிலான புதிய அமைச்சரவையில் சென்னை மாவட்டத்திற்குத்தான் அதிக அளவில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

கருணாநிதி (சேப்பாக்கம்), அன்பழகன் (துறைமுகம்), ஆற்காடு வீராசாமி (அண்ணாநகர்), ஸ்டாலின் (ஆயிரம் விளக்கு), பரிதி இளம்வழுதி (எழும்பூர்) ஆகியோர்சென்னை நகரத் தொகுதிகளில் வென்றவர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தா.மோ.அன்பரசன் அமைச்சராகிறார். திருவள்ளூர்மாவட்டத்தில் இருந்து மதிவாணன் (திருவள்ளூர்), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்)ஆகியோர் அமைச்சராகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஏ.வி.வேலு (தண்டாரம்பட்டு), விழுப்புரம்மாவட்டத்திலிருந்து பொன்டி (விழுப்புரம்), சேலம் மாவட்டத்திலிருந்து வீரபாண்டிஆறுமுகம் (சேலம் 2), தஞ்சை மாவட்டத்திலிருந்து கோ.சி.மணி (கும்பகோணம்),உபயதுல்லா (தஞ்சை) ஆகிய இருவரும் அமைச்சர்களாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலிருந்து துரைமுருகன் (காட்பாடி) அமைச்சராகியுள்ளார். மதுரைமாவட்டத்திலிருந்து பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் (மதுரை மத்தி), தமிழரசி(சமயநல்லூர்) ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலிருந்து கே.என்.நேரு (திருச்சி 2), செல்வராஜ் (முசிறி) ஆகியோர்அமைச்சராகியுள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்(குறிஞ்சிப்பாடி) அமைச்சராகியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஐ.பெரியசாமி (ஆத்தூர்) அமைச்சராகியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி)அமைச்சராகியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுப.தங்கவேலன் (கடலாடி),விருதுநகர் மாவட்டத்திலிருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (சாத்தூர்), தங்கம்தென்னரசு (அருப்புக்கோட்டை),

சிவகங்கை மாவட்டத்திலிருந்து பெரியகருப்பன் (திருப்பத்தூர்), திருநெல்வேலிமாவட்டத்திலிருந்து மொய்தீன் கான் (பாளையங்கோட்டை), பூங்கோதை ஆலடிஅருணா (ஆலங்குளம்) ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து சாமிநாதன் (வெள்ளக்கோவில்), என்.கே.கே.பி.ராஜா(ஈரோடு) ஆகியோரும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கீதா ஜீவன் (தூத்துக்குடி),திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மதிவாணன் (திருவாரூர்), நீலகிரி மாவட்டம்சார்பில் ராமச்சந்திரன் (கூடலூர்) ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.

இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கு 10 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.

விடுபட்ட 9 மாவட்டங்கள்:

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கோவை, நாமக்கல்,நாகப்பட்டனம், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சரவையில்பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X