For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி மீண்டும் முதல்வரானார்:ஸ்டாலின் உள்ளிட்ட 30 அமைச்சர்களும் பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Karunanithi
திமுக தலைவர் கருணாநிதி இன்று தமிழ முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 30அமைச்சர்களும் பதவியேற்றனர்.

நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த பிரமாண்டமான விழாவில் கருணாநிதிக்கு ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாபதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவிப் பிரமாணம்:

கருணாநிதி எனும் நான் சட்டப்படி அமைக்கப் பெற்ற இந்திய அரசியல்அமைப்பின்பால் நம்பிக்கையும், மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் எனவும்

இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசில் முதல் அமைச்சராக உண்மையாகவும்,உளச் சான்றின்படியும் எனது கடமையை நிறைவேற்றுவேன் என்றும்,

சட்டத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் இணங்க அச்சமும் இன்றி, விருப்ப வெறுப்புவிலக்கி பலதரப்பு மக்களுக்கு நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதிமொழிகிறேன் என்று கூறி தனது பதவியை ஏற்றார் கருணாநிதி.

இதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அன்பழகன், ஆற்காடுவீராசாமி ஆகியோரைத் தொடர்ந்து ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்துகோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், பொன்முடி, கே.என்.நேரு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,

ஐ.பெரியசாமி, பரிதி இளம்வழுதி, சுரேஷ் ராஜன், சுப.தங்கவேலன் , கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், பெரியகருப்பன், என்.கே.கே.பி. ராஜா, வேலு, உபயதுல்லா, மொய்தீன் கான், செல்வராஜ், தங்கம்தென்னரசு, சாமிநாதன்,

பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன்ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ்கள் மூலம்ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் சென்னை வந்து குவிந்தனர். நேரு உள் விளையாட்டு அரங்கம் நிறைந்துவழிந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சார்பில் வீரப்ப மொய்லி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும் விழாவில் பங்கேற்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மேடையில் கருணாநிதிக்கு அருகே அமர்ந்திருந்தார். அதே போல மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், நல்லகண்ணு உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்,காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

அதிமுக ஆட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா உள்ளிட்ட பலஐஏஎஸ் அதிகாரிகளும் மேடையில் மகிழ்ச்சியாக வலம் வந்தபடி இருந்தனர். அதே போல அதிமுக ஆட்சியில்முக்கிய பதவிகளில் இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றதோடு மேடையேறி திமுகவிஐபிக்களுக்கு மஸ்கா சஸ்கா போட்டுக் கொண்டிருந்ததையும், பெரும் கும்பிடு போட்டு அசத்திக்கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

விழாவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், ஈவிகேஸ் இளங்கோவன், வாசன், பிரபுல்படேல், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா, வேங்கடபதி, அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

தலைமைச் செயலாளர் நாராயணன் இந்த அரசு விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார். பதவியேற்றுவிழாவையொட்டி நேரு விளையாட்டு அரங்கத்தக்கு உள்ளும் வெளியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமே பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவுக்கு வரும் முன் பெரியார் நினைவிடத்துக்குச் சென்ற கருணாநிதி அங்கு பெரியார் சிலைக்குமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருக்கு கி.வீரமணி மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அடுத்து மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய கருணாநிதி, தி.நகர்காமராஜர் நினைவிடத்திலும் சென்று மரியாதை செலுத்திவிட்டே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X