For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்கள், திமுக தொண்டர்களால் திணறிய கோட்டை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் வரவேற்கக் கூடிய திமுகதொண்டர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் திமுதிமு வெள்ளத்தில் சிக்கி புனித ஜார்ஜ்கோட்டை திணறி விட்டது.

முதல்வர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், நேரு உள்விளையாட்டுஅரங்கத்திலிருந்து கிளம்பி தனது பிரசார வேனிலேயே தலைமைச் செயலகம் வந்தார்.

அந்த வேனில் கருணாநிதி தவிர ஸ்டாலின் உள்ளிட்ட பல புதிய அமைச்சர்களும்இருந்தனர்.

கருணாநிதியின் வருகையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அரசுஊழியர்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் திரண்டிருந்தனர்.

திமுகவினருக்கு இணையான உற்சாகத்துடன் தலைமைச் செயலக ஊழியர்களும்பெரும் திரளாக கூடியிருந்தனர்.

பெண் ஊழியர்கள் பட்டுச் சேலையிலும், பள பள உடைகளிலும், கையில் ரோஜாப்பூக்கள் அடங்கிய தட்டுக்களை ஏந்தியவாறு, நுழைவாயில் முதல் முதல்வர் அறைவரை வரிசையாக நின்றிருந்தனர்.

கருணாநிதியின் வேன் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்ததும் கூடியிருந்ததொண்டர்கள் கலைஞர் வாழ்க என்று முழக்கத்தை எழுப்பி அந்தப் பகுதியையேகலக்கி விட்டனர்.

அரசு பெண் ஊழியர்கள் மலர்களைத் தூவ வேன் தலைமைச் செயலக வளாகத்திற்குள்நுழைந்தது. வேனிலிருந்து கருணாநிதியால் இறங்க முடியாத அளவுக்கு தொண்டர்கள்கூட்டம் அலைமோதியது.

பல அரசு பெண் ஊழியர்களும் கண்களின் நீர் பனிக்க உணர்ச்சிப் பிரவாகமாகக்காட்சியளித்தனர். முதல்வர் வாழ்க கோஷமிட்டமிட்ட ரோஜா இதழ்களை வீசினர்.

போலீஸாரும், திமுக பிரமுகர்களும் பெரும்பாடு பட்டு கூட்டத்தை விலக்கிகருணாநிதியை வேனிலிருந்து இறங்க உதவினர். பின்னர் போலீஸாரின் அணிவகுப்புமரியாதையை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அனைத்து அமைச்சர்களும் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

அனைவரது மரியாதையையும் ஏற்றுக் கொண்ட கருணாநிதி, அமைச்சர்களைஅவரவர் அறைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் கருணாநிதி தனது முதல்வர் அறைக்குச் சென்றார். அவரை நிதி அமைச்சர்அன்பழகன், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், மின்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமி, மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராஜா உள்ளிட்ட அனைத்துஅமைச்சர்களும் இருக்கையில் அமர வைத்தனர்.

அதற்கு முன் அண்ணாவின் படத்தருகே சென்று சிறிது நேரம் நின்ற கருணாநிதி,படத்தை கும்பிட்டு வணங்கினார்.

பின்னர் ஸ்டாலின், தனது தந்தையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்று தனதுஅறைக்கு கிளம்பினார்.

இதேபோல அன்பழகன் தனது அறைக்குச் சென்றபோது மூத்த அமைச்சர்களும்,ஸ்டாலினும் அவரை இருக்கையில் அமர வைத்து பொன்னாடை அணிவித்தனர்.அன்பழகனின் காலில் விழுந்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

பின்னர் ஸ்டாலினை அன்பழகன், ஆற்காடு வீராசாமி, தயாநிதி உள்ளிட்டோர்அழைத்துச் சென்று அவரது அறையில் அமர வைத்தனர். அப்போது ஸ்டாலினின்காலில் விழுந்து ஆசி பெற்றார் தயாநிதி மாறன்.

முதல்வர் கருணாநிதியின் அறைக்கு வெளியேயும், உள்ளேயும் திமுகவினரின்கூட்டம் நிரம்பி வழிந்தது. கருணாநிதியின் இருக்கை, மேசையைத் தவிர மற்றஇடங்களில் எல்லாம் குண்டூசி விழ முடியாத அளவுக்கு தொண்டர்கள்நிரம்பியிருந்தனர்.

போதும் கிளம்புங்க என்று கருணாநிதி பலமுறை கூறியும் தொண்டர்கள் நகரவில்லை.இதையடுத்து சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கி, அப்ப இங்கேயே இருங்கஎன்றார்.

இப்படி ஒரு காட்சியை இதற்கு முந்தைய ஆட்சியில் நினைத்துக் கூட பார்க்கமுடியாது என்று ஒரு அரசு அதிகாரி கூறியதைக் கேட்க முடிந்தது.

திமுகவினரின் உற்சாகம், ஆர்வம் கரைபுரண்டோடியதில் பாதிக்கப்பட்டவர்கள்காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும்தான்.

மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர் டிஜிபி அலெக்சாண்டர் தான். முதல்வரைப்பார்ப்பதற்காக அவரது அறைக்கு வந்த அலெக்ஸை உள்ளே நுழைய விடாமல்திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.

சில தொண்டர்கள் அவரை நெருக்கியடித்து தள்ளியும் விட்டதைப் பார்க்க முடிந்தது.இதைப் பார்த்த போலீசார் வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டனர்.

இதேபோல முதல்வரை சந்தித்து வாழ்த்து சொல்லக் காத்திருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கும் இதே நிலைதான்.

யாராலும் முதல்வரின் அறைக்குள் நுழையவே முடியவில்லை. பல பெண்அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் முதல்வர் அறைக்குள் நுழைய முடியாமல்தங்களது அலுவலகங்களுக்குத் திரும்பிச் சென்று விட்டனர்.

வழக்கமாக தொண்டர்கள் அத்துமீறும்போது அவர்களை தனது பார்வையாலேயேகட்டுப்படுத்தி விடுவார் கருணாநிதி. ஆனால் இந்த முறை அவர் அப்படிச்செய்யவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளசந்தோஷத்தில் இருக்கும் தொண்டர்களைக் கட்டுப்படுத்த அவரும் விரும்பவில்லை,மற்ற திமுக தலைவர்களும் விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது.

திமுக தொண்டர்களின் ற்றுகையால் புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் திணறித்தான்போனது. பதவியேற்பு விழாவில் 3 முக்கியக் கோப்புகளில் கையெழுத்துப் போட்டகருணாநிதி, தலைமைச் செயலகத்தில் எந்த கோப்புகளையும் பார்க்கவில்லை.

பார்க்க வேண்டிய, கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகளை தனது சிஐடி நகர்வீட்டுக்கு எடுத்து வருமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

வாழ்த்துக்கள், மரியாதைகளை ஏற்றுக் கொண்ட கருணாநிதி பின்னர் தனது பிரசாரவேனிலேயே இல்லம் திரும்பினார்.

எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக கலைந்து சென்ற பின்னர் தலைமைச் செயலாளராகஇருந்து இப்போது மாற்றப்பட்டுள்ள நாராயணன் தனது அறைக்குத் திரும்பிச்சென்றார்.

இப்படியாக முதல்வர் கருணாநிதியின் முதல் நாள் கோலாகலமாக முடிவடைந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X