For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியை சந்தித்த சிவனாண்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மற்ற ஆளுநர்களைப் போலில்லாமல் புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியை தமிழிலேயே நடத்தி தமிழர்களுக்குபெருமை சேர்த்தார் சுர்ஜித் சிங் பர்னாலா.

karunanithi with Barnala
தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமாக ஆளுநர்கள் ஆங்கிலத்தில் தான் பதவிப் பிரமாணம் செய்து வைப்பர்.ஆனால், தமிழ்நாட்டுக்கு கடந்த முறை ஆளுநராக வந்தபோதே தமிழ் கற்க ஆரம்பித்தவர் பர்னாலா.

மீண்டும் கவர்னரானவுடன் மீண்டும் தமிழ் படிக்க ஆரம்பித்துவிட்டார். நேற்று கருணாநிதி தலைமையிலானஅமைச்சரவை பதவியேற்பை தமிழிலேயே நடத்தி அசத்தினார் ஆளுனர்.

பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணத்தின்போது மு. கருணாநிதி என்னும் நான்.., க. அன்பழகன் என்னும்நான்.. என்று முதல்வர், அமைச்சர்களின் பெயர்களை பர்னாலா தமிழிலேயே சொல்லி தொடங்கி வைக்கபிரமாண வாசங்களைப் படித்தனர் அமைச்சர்கள்.

கருணாநிதியை சந்தித்த சிவனாண்டி:

புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதியை உளவுத்துறையில் இருந்தபடி கட்சி உடைப்புகள், கூட்டணிஉடைப்புகளைச் செய்து அதிமுகவுக்காக அரும்பாடு பட்ட சிவனாண்டி சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளார்.

தன்னை சந்திக்க வந்த சிவனாண்டியை கருணாநிதியும் மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்துக்களையும்பொக்கேவையும் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்.

நிரம்பி வழியும் அரசு இல்லங்கள்:

அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாகப் பொறு"பபில் இருந்தவர்கள் அரசு இல்லங்களை காலி செய்யாததால் புதியஅமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் பல்வேறு அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்கியுள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் தான் அமைச்சர்களுக்கான இல்லங்கள் உள்ளன. இந்த இல்லங்களில் அதிமுகமுன்னாள் அமைச்சர்கள் தங்கியிருப்பதால் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட அரசு மாளிகைகள்எல்லாம் திமுக புதிய அமைச்சர்களாலும் திமுகவினராலும் நிரம்பி வழிகின்றன.

ஜெ படத்தை எடுக்காத செய்தித்துறை:

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்தவுடனேயே தலைமைச் செயலகத்தில் இருந்த மாஜி முதல்வர்ஜெயலலிதாவின் படங்களை அதிகாரிகள் அகற்றினர். ஆனால், செய்தித் துறையின் மட்டும் ஜெயலலிதாவின்படம் அப்படியே தொங்கியது.

காரணம், இந்தத் துறையில் சசி கும்பலுக்கு வேண்டிய பலர் பணியில் நுழைக்கப்பட்டது தான். இந் நிலையில்நேற்று முன் தினம் இரவு தான் அதிகாரிகள் வந்து சத்தம் போட்டு ஜெயலலிதா படத்தை அகற்ற வைத்துள்ளனர்.

இந்த சசி ஆதரவு ஆட்கள் அனைவரும் கூண்டோடு தூக்கப்பட்டு வருமானம் இல்லாத வறண்ட பதவிகளுக்குஅனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.

அத்வானி வாழ்த்து:

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாஜக தலைவர்அத்வானி வாழ்த்துத் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X