
பேருந்து நிலைய குப்பைத் தொட்டியில் மனித இதயம், சிறுநீரகம்!
தர்மபுரி:
தர்மபுரி பேருந்து நிலையத்தில் மனித இதயம், சிறுநீரகமும் சிதறிக் கிடந்ததைப்பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பேருந்து நிலைய புறக்காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்துசிறுநீரகத்தையும், இதயத்தையும் பாலிதீன் பையில் போட்டு எடுத்துச் சென்றனர்.
விபத்தில் இறந்தவர்கள்,கொலை செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் உடல்களைஅரசு மருததுவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யும் போது, முக்கிய பாகங்கள்எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அப்படி அனுப்பி வைக்கப்பட்ட உடல் பாகங்கள்அடங்கிய பாட்டில்கள்உடைந்ததால், அவற்றை தர்மபுரி பேருந்து நிலைய குப்பைத் தொட்டியில் போலீஸார்போட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் வழக்கு ஏதும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.கைப்பற்றப்பட்ட உறுப்புகளை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்ததாகவும்தெரியவில்லை.