For Quick Alerts
For Daily Alerts
Just In

கருணாநிதி கைதை விசாரித்த கமிஷன் கலைப்பு
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரம்குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ராமன் கமிஷனை திமுக அரசு கலைத்துவிட்டது.
கருணாநிதியைக் கைது செய்தபோது, போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதால்தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்மத்திய அரசிடம் புகார் கொடுத்தன.
சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என அதிமுகஅரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கருணாநிதி கைது சம்பவம் குறித்து நீதி விசாரணைக்குஅப்போதையமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி ராமன்தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த கமிஷனைக் கலைத்து திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை தலைமைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ளார்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, August 14, 2006, 5:30 [IST]