For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை-பரிகார பூஜை செய்ய மாட்டேன்: கண்டரரு மகேஷ்வரு

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி:

சபரிமலை தந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்ட கண்டரரு மோகனரு உள்ளிட்டோர்மீதான புகார்களை திருவாங்கூர் தேவசம் போர்டு திரும்பப் பெற வேண்டும்.அதுவரை உண்ணிகிருஷ்ண பணிக்கர் தேவ பிரசன்னம் பார்த்துச் சொன்ன பரிகாரபூஜைகளை நான் நடத்த மாட்டேன் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மோகனருவின்தந்தையும், மூத்த தந்திரியுமான கண்டரரு மகேஷ்வரரு கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை பரப்பனங்காடி உண்ணிகிருஷ்ணபணிக்கர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்த்தார். அப்போது பலதிடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டார். கோவிலுக்குள் ஒரு பிரபல பெண்நுழைந்து விட்டார்.

இதனால் தீட்டு பட்டு விட்டது. இதற்கு பல பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றுஅவர் கூறியிருந்தார்.

இதையடுத்து கன்னட நடிகை ஜெயமாலா, நான் தான் கோவிலுக்குள் நுழைந்த பெண்என்று கூறினார். இதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சபரிமலைகோவிலில் பரிகார பூஜைகள் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கோரி கேரளஉயர்நீதிமன்றத்தில் பந்தளம் ராஜ குடும்பத்தார் சார்பில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விளககம் அளிக்குமாறு, சபரிமலை மூத்த தந்திரி கண்டரருமகேஷ்வரருவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு மகேஷ்வரரு பதில் மனு தாக்கல் செய்துளார். அதில், சபரிமலை ஐயப்பன்கோவிலின் மூத்த தந்திரி என்றமுறையில், தந்திரி குடும்பத்தின் பிறஉறுப்பினர்களுடன் நான் தீவிர ஆலோசனை நடத்தினேன்.

அதன் பின்னரே பரிகார பூஜைகளை நடத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.திருவாங்கூர் தேவசம் போர்டிடம் இருந்து இந்த விஷயத்தில் எனக்கு எந்தவிதமோதலும் இல்லை. இருப்பினும் பூஜைகள் தொடர்பான முடிவை தந்திரிகள் மட்டுமேஎடுக்க முடியும். அது எங்களது உரிமையாகும்.

கடந்த ஜூன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை உண்ணிகிருஷ்ண பணிக்கர் பார்த்ததேவ பிரசன்னத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. தேவ பிரசன்னத்தில்தேவசம் போர்டின் குறுக்கீடுகள் இருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

வழக்கமாக பார்க்கும் தேவ பிரசன்ன நடைமுறைகளிலிருந்து தற்போதைய போர்டுவிலகிச் செல்கிறது. மேலும் தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள பரிகாரங்களும்வழக்கத்தில் இல்லாதது. எனவே இந்த பரிகார பூஜைகளை என்னால் செய்ய முடியாதுஎன்று கூறியுள்ளார் மகேஷ்வரரு.

இதற்கிடையே நாளை மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.மேல்சாந்தி சுகுமாறன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

17ம் தேதி ஆவணி மாத பிறப்பையொட்டி காலையில் லட்சார்ச்சனை நடக்கும்.இதைத் தொடர்ந்து ஐயப்பன் சன்னதியில் பூஜை செய்யும் புதிய தந்திரியா கண்டரருராஜீவரு பதவியேற்றுக் கொள்வார்.

இது குறித்து ராஜீவரு கூறுகையில், சபரிமலையில் முறைப்படி பூஜைகள் நடத்தப்படவேண்டும். ஐயப்பனுக்குத் தேவை விவாதங்கள் அல்ல. அவருக்கு சக்தி தருவதுதாந்த்ரீக கர்மங்களே ஆகும். ஐயப்பன் என்ற மகா சக்தியை மறந்தவர்கள் தான் தேவபிரசன்னம் என்ற பெயரில் விவாதங்களை உருவாக்கி வருகிறார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X