For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-4 செயற்கை கோள்களையும் ஏவியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:4 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி7 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தான்ஏந்திச் சென்ற 4 செயற்கைக் கோள்களையும் பூமியின் வட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியதுபிஎஸ்எல்வி.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தாவன் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 9.23மணிக்கு பிஎஸ்எல்வி செலுத்தப்பட்டது. 44.4 மீட்டர் உயரம், 295 டன் எடை கொண்ட, நான்கு கட்ட எரிபொருள்என்ஜின்கள் கொண்ட பிஎஸ்எல்வி ஏவப்படுவது இது 10வது முறையாகும்.

PSLV3

கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி இன்சாட் 4-சி செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்- 02 ராக்கெட்ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட 45 வினாடிகளில் தனது நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையை விட்டு திசை மாறிச்சென்றது. இதையடுத்து அதை விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்தனர். அந்த தோல்விக்குப் பின் இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட்விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்தியாவின் கார்டோசாட்-2 (680 கிலோ எடை கொண்ட தொலை உணர்வு செயற்கைக் கோள்), 550 கிலோஎடை கொண்ட ஸ்பேஸ் கேப்சூல் ரெக்கவரி சோதனை சாதனம் (எஸ்.ஆர்.இ), இந்தோனேசியாவின்லபான்-டுபாசாட் செயற்கைக் கோள், அர்ஜென்டினாவின் 6 கிலோ எடை கொண்ட பெஹ்யூன் சாட் செயற்கைக்கோள் ஆகியவை ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த 3 செயற்கைக் கோள்களையும், எஸ்.ஆர்.இசாதனத்தையும் சரியான வட்டப் பதைகளில் பிஎஸ்எல்வி வெற்றிகரமாக செலுத்தியது.

இந்திய ராக்கெட் மூலம் நான்கு செயற்கைக் கோள்கள் எடுத்துச் செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.இதில் முக்கியமானது எஸ்.ஆர்.இ. எனப்படும் ஸ்பேஸ் ரெக்கவரி சோதனை சாதனம்.

இது விண்வெளிக்குச் சென்று விட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமிக்குத்திரும்புகையில், ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள கடல் பகுதியில் பாராசூட் மூலம் இது கீழே இறங்கும். அதன்பிறகும் இதை பலமுறை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் சோயுஸ் விண்கல கேப்சூல்அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

விண்ணுக்கு சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையிலான விண்வெளி ஓடங்களைத் தயாரிக்கும்இந்தியாவின் கனவுக்கு இந்த சோதனை முயற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

ஏவப்பட்ட 40வது வினாடியில் அர்ஜென்டினாவின் பெஹ்யூன் சாட் செயற்கைக் கோளை முதலில் புவி வட்டப்பாதையில் செலுத்தியது பிஎஸ்எல்வி. அடுத்ததாக இந்தோனேசியாவின் லபான்-டுபாசாட் செயற்கைக் கோளைசெலுத்தியது.

அடுத்த 20 நிமிடங்களுக்குள் இந்தியாவின் கார்டோசாட்-2, ஸ்பேஸ் கேப்சூல் ரெக்கவரி சோதனை சாதனம்ஆகியவற்றை அதனதன் வட்டப் பாதைகளில் செலுத்தி முடித்துவிட்டது பிஎஸ்எல்வி. எல்லா செயற்கைக்கோள்களும் 1,171 வினாடிகளுக்குள் மிகச் சரியாக, குறிப்பிட்ட இடங்களில் செலுத்தப்பட்டதையடுத்துவிஞ்ஞானிகள் எழுந்து நின்று ஆராவாரம் செய்தனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

கூடுதல் கவனத்தைக் கடைப்பிடித்த இஸ்ரோ:

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி-எப்2 தோல்வி அடைந்ததால், பிஎஸ்எல்வி சி-7 ராக்கெட்டை ஏவும் நடவடிக்கைகளில்இஸ்ரோ விஞ்ஞானிகள் கூடுதல் கவனமாக இருந்தனர் என்று பிஎஸ்எல்வி திட்ட இயக்குநர் ஜார்ஜ் கோஷி கூறினார்.

பிஎஸ்எல்வியின் வெற்றிகரமான பயணத்திற்குப் பின்னர் கோஷி கூறுகையில், கடந்த ஆண்டு ஜிஎஸ்எல்வியை ஏவுவது தோல்வியில் முடிவதற்கு முன்பே இந்தராக்கெட்டின் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஜிஎஸ்எல்வி தோல்வியைத் தொடர்ந்து நாங்கள் கூடுதல் கவனத்துடன் பிஎஸ்எல்வி தொடர்பானபணிகளில் ஈடுபட்டு வந்தோம்.

ராக்கெட்டின் அனைத்து செயல்பாடுகளையும் நாங்கள் முழுமையாக மறு ஆய்வு செய்தோம். ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறிய தரப்பரிசோதனை நடத்தப்பட்டது. பழுதடையலாம் என சந்தேகிக்கப்பட்ட பகுதிகள் மாற்றப்பட்டன.

இது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. இஸ்ரோ குழுவினர் அத்தனை பேரும் மிகக் கடுமையாக பாடுபட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. அத்தனை பேரும் மிகத் தீவிரமாக உழைத்ததால்தான் நூறு சதவீத வெற்றியை எங்களால்பெற முடிந்தது.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து பல மாதங்களாக இந்த வெற்றிக்காக பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

முதல் முறையாக இந்த ராக்கெட்டில் வீடியோ படம் எடுக்கும் கருவியைப் பொருத்தியிருந்தோம். இதன் மூலம் ராக்கெட்டிலிருந்து செயற்கைக்கோள்கள் பிரிந்து செல்வதைக் காண முடியும். இந்தப் புகைப்படங்கள் இன்று பிற்பகலுக்குள் தரைக் கட்டுப்பாட்டுத் தளத்தை வந்தடையும் என்றார்கோஷி.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி வாழ்த்து:

இதற்கிடையில் பி.எஸ்.எல்.வி. சி-7 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டும்,வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியுள்ள செய்தியில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளிஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி7 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

இதன் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்று நம்புகிறேன். தங்களது ஆட்சியின் கீழ் காட்டப்பட்டு வரும் ஆக்கமும்,ஊக்கமுமே இத்தகைய வெற்றிக்கு முக்கியக் காரணம்.

இந்த சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளையும் நான் வாழ்த்திப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X