For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுக்குழுக் கூட்டம் மகத்தான வெற்றி: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மதிமுக பொதுக்குழுக் கூட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 1303 பொதுக்குழுஉறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா நகர் விஜயஸ்ரீமஹால் கல்யாண மண்டபத்தில் நேற்று மதிமுகபொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த கூட்டம்என்பதால் மதிமுக தொண்டர்கள் விழிப்போடு இருந்தனர். கூட்டத்திற்கு வருபவர்கள்தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.

Vaiko and Kannappan

பொதுக்குழு உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் மண்டபத்திற்குள்அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் முழுவதும் வீடியோவில் படமாக்கப்பட்டது.கிட்டத்தட்ட கல்யாண நிகழ்ச்சி போல காணப்பட்டது பொதுக்குழுக் கூட்டநிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சி முழுவதற்கும் தொண்டர்களே பாதுகாப்பு அளித்தனர். பாதுகாப்புக்காக வந்தபோலீஸாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை. மதிமுக தொண்டர் அணியினரேமுழுப் பாதுகாப்பையும் மேற்கொண்டனர்.

கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுகவுடன்தோழமையை வலுப்படுத்திக் கொள்வது, இன்னும் தீவீரமாக இணைந்துசெயல்படுவது என ஒரு தீர்மானமும், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனைநிரந்தரமாக நீக்கி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தப்பொதுக்குழுக் கூட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 1416பொதுக்குழு உறுப்பினர்களில் 1303 பேர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

சிலர் தவிர்க்க முடியாத சூழ்நிலையாலும், உடல் நலக்குறைவினாலும், குடும்பச்சூழ்நிலை காரணமாகவும் வர இயலவில்லை. பொதுக்குழுவில் எடுக்கப்படும்முடிவுகள ஏற்பதாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பொதுக்குழுவை நடத்த விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திமுகஅமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலாளர்களும், பொதுக்குழு உறுப்பினர்களுக்குபணத்தாசை காட்டி பார்த்தார்கள். ஆனால் எங்களது பொதுக்குழு உறுப்பினர்கள்அதை நிராகரித்து விட்டனர்.

மதிமுக தியாகத்தால் உருவான கட்சி. இதை யாராலும் அழிக்க முடியாது, எந்தசக்தியாலும் அது முடியாது. தொண்டர்கள் அத்தனை பேரும் இப்போது உத்வேகம்அடைந்துள்ளனர். கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

மாவட்ட வாரியாக நானும், தலைமைக் கழக நிர்வாககிளும் சுற்றுப்பயணம் செய்துதொண்டர்களை சந்திக்கவுள்ளோம். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையன்றுகட்சிக் கொடி ஏற்றிக் கொண்டாடவுள்ளோம்.

எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கட்சிப் பொறுப்புகளிலிருந்துதான்நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இன்னும் கட்சியில் உறுப்பினர்களாக அவர்கள்நீடிக்கின்றனர்.

அவர்களை எய்தது வேறு ஒருவர். எனவே இவர்களை நொந்து புண்ணியம் இல்லை.எனவே எனக்கு இவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை. 13 ஆண்டுகள் எங்களோடுஇருந்தவர்கள். அதை மனதில் கொண்டும், நட்பு, பாசம் காரணமாக கட்சியிலிருந்துநீக்கவில்லை. தவறை உணர்ந்து அவர்கள் திரும்பக் கூடும். அதனால் அவர்கள்மதிமுக உறுப்பினர்களாக நீடிப்பார்கள்.

நாடாளுமன்ற மதிமுக தலைவராக எல்.கணேசன் உள்ளார். அவரை மாற்றநடவடிக்கை எடுக்கப்படும். அவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தி புதியவர்நியமிக்கப்படுவார் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X