For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிப்ட் கேட்டு கொள்ளையடித்த தம்பதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தனியாக மோட்டார் சைக்கிளில் வரும் ஆண்களை நிறுத்தி லிப்ட் கேட்பது போல நடித்து, அவர்களிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றைப்பறித்த பெண்ணையும், அவரது கணவரையும் போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

சென்னையின் இதயமான ஜெமினி மேம்பாலத்தின் கீழே, அமெரிக்க தூதரகம் உள்ள பகுதியில் பெரம்பூரைச் சேர்ந்த வாசுதேவன் (வயது 50),என்பவர் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

Radhika and Premkumar

அப்போது சிக்னல் விழுந்து விட்டதால் பைக்கின் வேகத்தைக் குறைத்தார். அந்த சமயத்தில் சாலையோரம் நின்றிருந்த ஒரு பெண் வாசுதேவனைநெருங்கி, சார், திருமலைப்பிள்ளை சாலையில் (தி.நகர்) இறக்கி விட்டு விட முடியுமா என்று கொஞ்சலாக பிளஸ் கெஞ்சலாக கேட்டுள்ளார்.

இளம் பெண் ஒருவர் லிப்ட் கேட்டதால் லேசாக ஜெர்க் ஆன வாசுதேவன், ஆஹா, பேஷா என்று கூறியபடி வண்டியில் ஏற்றிக் கொண்டார்.திருமலைப் பிள்ளை சாலை வந்ததும் வாசுதேவனின் வண்டியிலிருந்து இறங்கிய அந்தப் பெண் ரொம்ப நன்றி சார் என்று கூறியபடி, அதேகொஞ்சலுடன் வாசுதேவனிடம் சில விநாடிகள் பேச்சுக் கொடுத்துள்ளார்.

வாசுதேவனும், வண்டியை ஆப் செய்து விட்டு பதில் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில், முறுக்கு மீசையுடன் தாட்டியான ஒரு நபர் புல்லட்டில்வந்தார். வாசுதேவனை நெருங்கிய அவர், இந்த ராத்திரியில் விபச்சாரியுடன் உனக்கு என்ன பேச்சு? ஜாலியா இருக்கப் போறீங்களா, வாங்கஸ்டேஷனுக்கு என்று மிரட்டியுள்ளார்.

அதைக் கேட்டதும் அரண்டு போன வாசுதேவன், அய்யா, இவங்க லிப்ட் கேட்டாங்க, நான் கொடுத்தேன், தட்ஸ் ஆல் என்று கூறியுள்ளார். ஆனால்அந்த மீசை நபரோ, அதெல்லாம் கிடையாது, பேசாம நடங்க ஸ்டேஷனுக்கு என்று கூறியபடி, வாசுதேவனின் வண்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணையும் இழுத்தபடி நடக்கத் தொடங்கினார்.

இதைப் பார்த்து பயந்து போன மகேஸ்வரன், சார், சார் என்றபடி அந்த நபரின் பின்னால் ஓடினார். சிறிது தூரம் போன பிறகு, நின்ற அந்த நபர்,ஸ்டேஷனுக்குப் போனால் பெரிய சிக்கலாகி விடும், அழகியுடன் கைது என்று போட்டோ போட்டு அசிங்கப்படுத்தி விடுவார்கள். எனவே கையில்இருப்பதைக் கொடுத்து விட்டு வீட்டுக்குப் போங்க என்று மகேஸ்வரனிடம் கூறியுள்ளார்.

ஆனால் மகேஸ்வரன் தயங்கவே, அந்த நபரே உரிமையோடு, மகேஸ்வரன் போட்டிருந்த 2 தங்க மோதிரங்கள், கிரெடிட் கார்டு, 2 ஆயிரம் ரூபாய்பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு புல்லட்டில் ஏறிப் பறந்து விட்டார்.

என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவே கொஞ்ச நேரம் ஆகியிருக்கிறது மகேஸ்வரனுக்கு. பின்னர் சுதாரித்த அவர் பாண்டிபஜார் காவல்நிலையம் விரைந்தார். தன்னை மிரட்டிய நபரின் அடையாளங்களைக் கூறி இப்படி ஒரு அதிகாரி விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸில்உள்ளார்களா என்று கேட்டுள்ளார்.

அப்படி ஒரு ஆளே கிடையாதப்பா என்று போலீஸார் கூறவும், தன்னை மோசடி செய்து விட்டதை உணர்ந்தார் மகேஸ்வரன். போலீஸாரும் இந்தசம்பவத்தை சீரியசாக எடுத்துக் கொண்டனர்.

அடுத்த நாள் அதே ஜெமினி மேம்பாலம் அருகே போலீஸார் மாறு வேடத்தில் கண்காணித்தனர். அப்போது மகேஸ்வரனை ஏமாற்றிய பெண்அதே இடத்தில் நின்றிருந்தார். அவரை மகேஸ்வரன் அடையாளம் காட்டவே போலீஸார் அந்தப் பெண்ணை வளைத்துப் பிடித்தனர்.

அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவலைக் கக்கினார் அப்பெண்.

அந்தப் பெண்ணின் பெயர் ராதிகா. 27 வயதாகிறதாம். விபச்சார ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரி என்று கூறி மகேஸ்வரனை மிரட்டிய நபரின்பெயர் பிரேம்குமாராம். அவர், ராதிகாவின் கணவர். 3 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டுள்ளனர். ஒரு குழந்தையும் உள்ளதாம்.

ராதிகா பி.காம் வரை படித்துள்ளார். பிரேம்குமார் வி.ஓ.வாக (அதாவது வேலை இல்லாதவர்!) இருக்கிறார். இதனால் குடும்பம் நடத்த கையில்பணம் போதவில்லை. இதையடுத்து இப்படி குறுக்கு வழியில் குதித்து குடும்பத்தைக் கடத்த திட்டமிட்டு நூதனமான முறையில் வழிப்பறியில்இறங்கியுள்ளனர்.

ஜெமினி பாலம் அருகே நின்று கொள்வாராம் ராதிகா. ஜொள்ளு பார்ட்டி போல தெரியும் நபர்களின் வண்டியை நிறுத்தி லிப்ட் கேட்டு ஏறிக்கொள்வார். பின்னர் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தியவுடன், பிரேம்குமார் போலீஸ் அதிகாரி போல வந்து லபக்கெனப் பிடித்து அந்தநபரிடம் உள்ளவற்றைப் பறித்துக் கொண்டு, ராதிகாவையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தப்பி விடுவாராம்.

இப்படிப் பலரை மிரட்டி பணம், நகை, கிரடிட் கார்டு உள்ளிட்டவற்றை இந்த கணவன், மனைவி கும்பல் பறித்துள்ளதாம். மற்றபடி விபச்சாரம்எல்லாம் செய்வது கிடையாதாம்.

இதைத் தொடர்ந்து பிரேம்குமாரையும், ராதிகாவையும் போலீஸார் கைது செய்தனர்.

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் தனியாக செல்வோர், கவனச் சிதறல் இன்றி சென்றால்தான் இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பிக்கமுடியும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X