சட்டசபை கூடியது: சண்முகத்திற்கு இரங்கல்
சென்னை:தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்குஇரங்கல் தெரிவித்த பின்னர் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. முதலில் இரங்கல் குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மறைந்தஉறுப்பினர்கள் சுந்தராம்பாள், மலைக்கண்ணன், சுவாமிதாஸ், பழனிவேலன் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.
பின்னர் மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுநிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை காலை 9.30 மணிக்கு 2007-08ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர்அலுவல் ஆய்வுக் குழு கூடி அவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கும். இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாத இறுதிவரை நடைபெறும் எனத் தெரிகிறது.
முல்லைப் பெரியாறு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, இலவசத் திட்டங்களால் மாநில அரசுக்குஏற்பட்டுள்ள நிதிச் சுமை, சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி என எதிர்க்கட்சியினருக்கு அவலாக பல பிரச்சினைகள் சபையைக் கலக்க காத்துள்ளன.
இதுவரை அதிமுக, மதிமுக என இரு எதிர்க்கட்சிகளை மட்டுமே சமாளிக்க வேண்டிய நிலை திமுகவுக்கு இருந்தது. ஆனால் தற்போது பாமகவும்கிட்டத்தட்ட எதிர்க்கட்சி நிலையில் இருந்து சபையைக் கலக்க தயாராகி வருகிறது.
டாஸ்மாக் மதுக் கடை விவகாரம், சிறப்புப் பொருளாதார மண்டலம், சென்னை விமான நிலைய விரிவாக்கம், உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி போன்ற விவகாரங்களை சபையில் பெரிதாக எழுப்ப பாமக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக திமுகவுடன் ஏற்பட்டு வரும்உரசல்களின் விளைவாக, இம்முறை பாமக எம்.எல்.ஏக்கள் சற்றே கடுமையாக பேசக் கூடும், அணுகக் கூடும் என கூறப்படுகிறது.
மது விலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி பாமக மகளிர் அணியினர் மிகக் கடுமையான, நேரடிப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகடாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே மது விலக்குப் பிரச்சினையையும் சபையில் பாமக எழுப்பக் கூடும் எனத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications