For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: சார்க் பிரகடனம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லிசார்க் நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை ஒழிக்க கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லியில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்து வந்த 14வது சார்க் மாநாடு இன்று மாலையுடன் முடிவடைந்தது. மாநாட்டின் நிறைவாக சார்க் நாடுகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

கூட்டுப் பிரகடனத்தின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய், வங்கதேச தலைமை ஆலோசகர் பக்ருதீன் அகமது, பூடான் பிரமதர் லியானபோ காண்டு வாங்க்சுக், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மாலத்தீவுகள் அதிபர் முகம்மது அப்துல் கயூம், நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே ஆகியோர் டெல்லியில் நடந்த 14வது தெற்காசிய கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்

சார்க் அமைப்பில் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு முதலில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. சார்க் அமைப்பின் உறுப்பு நாடாக ஆப்கானிஸ்தான் இணைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணமாகும்.

தெற்காசிய மக்களின் நல வாழ்வை முக்கியமாகக் ெகாண்டு, சார்க் நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய வளர்ச்சி, தெற்காசிய மக்களின் நல்வாழ்வு, அனைவருக்கும் சம உரிமைகள், ஒற்றுமை ஆகியவற்றை மேமம்படுத்த சார்க் தலைவர்கள் உடன்பாடு கொண்டுள்ளனர்.

தெற்காசிய நாடுகளுக்கிடையே, சரக்கு, தொழில்நுட்பம், அறிவுசார் முதலீடுகள், கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் சிறந்த ஒத்துழைப்பை மேற்ெகாள்ள சார்க் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

வறுமையை ஒழிக்க கூட்டாக செயல்பட சார்க் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். வறுமைக்கு எதிராக போர் தொடுக்கவும் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

தெற்காசிய நாடுகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஒவ்ெவாரு நாட்டிலும் ஒரு சார்க் கிராமத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தொழிலை மேம்படுத்து, உயர்த்த இந்த சார்க் கிராமம் வழி வகுக்கும்.

சார்க் நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த, பல்நோக்கு போக்குவரத்து உருவாக்கப்படும். இதை சிறந்த முறையில் அமல்படுத்துவது தொடர்பாக சார்க் பிராந்திய பன்னோக்கு போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் ஆப்கானிஸ்தானும் சேர்த்துக் கொள்ளப்படும்.

சார்க் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் திருப்தியுடன் ஏற்றுக் கொண்டுள்ளன. அதை சுமூகமான முறையில் அமலாக்க சார்க் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனற்.

தெற்காசிய பொருளாதார யூனியன், தெற்காசிய சுங்க யூனியன் ஆகியவற்றை அமைக்க படிப்படியான நடவடிக்கைகளுக்கு தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

சார்க் நாடுகளுக்கு இடையே கலாச்சார, சமூக உறவுகளை வலுப்படுத்த உறுதி பூணப்பட்டுள்ளது. சார்க் நாடுளின் மக்களுக்கிடையே அடிக்கடி கலந்துரையாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு ஆண்டுதோறும் சார்க் உறுப்பு நாடுகளில் கலாச்சார திருவிழாக்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக வங்கதேசத்தில் முதலாவது சார்க் இளைஞர் முகாம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் தெற்காசிய பல்கலைக்கழகம் நிறுவப்படும்.

சமுதாயத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவும், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கவும் சார்க் நாடுகள் உறுதியுன் பாடுபடும்.

நோய்கள், இயற்கை சீற்றம், தீவிரவாதம், வறுமை ஆகியவற்றை ஒழிக்க கூட்டு நடவடிக்கை தேவை என்பதை சார்க் தலைவர்கள் உணர்ந்துள்ளனர், வலியுறுத்தியுள்ளனர். இவற்றை சமாளிக்க சார்க் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

சார்க் பிராந்தியத்தில் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதை சார்க் தலைவர்கள் முக்கிய கவனத்தில் கொண்டுள்ளனர். அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் தாக்குவதற்கு தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து வகையிலும் பாடுபட சார்க் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

தீவிரவாதம் தவிர போதைப் பொருள் கடத்தல், பெண்களைக் கடத்துதல், குழந்தைகளைக் கடத்துதல் போன்றவற்றையும் சந்தித்து ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

சார்க் நாடுகளில் நிலவும் ஊழலை ஒழிக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

சார்க் மாநாட்டிற்கு பார்வையாளர்களாக கலந்து கொண்ட சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனிடன், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சார்க் அமைப்பு தனது பாராட்டையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

15வது சார்க் உச்சி மாநாடு மாலத்தீவில் நடைபெறும் என்று கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X