For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையை மேம்படுத்த ரூ.45,000 கோடி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை மாநகரை உலக தரம் மிக்க நகரமாக மாற்றுவோம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து சில முக்கிய குறிப்புகளை அவர் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்,

  • சென்னை மாநகரை உலகதரம் வாய்ந்த நகரமாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.

  • மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற சீரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகர மேம்பாட்டு திட்டம் ரூ. 45,000 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்ட மதிப்பீடு ரூ. 3,400 கோடியாகும். இத்திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

  • 8 இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடப்பதற்கு ஒரு உயர்மட்ட பாலம், 3 மேம்பாலங்கள், 4 சுரங்க பாதைகளும், கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  • புனித ஜார்ஜ் கோட்டையில் முன்புறம் பகுதி, மெரீனா கடற்கரை, எலியர்ட்ஸ் கடற்கரை பகுதி ஆகியவற்றை அழகுப்படுத்தி ரூ. 25 கோடி செலவிடப்படும்.

  • நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து மண் சாலைள் மற்றும் கல் ரோடுகளை தார் சாலையாகவும், சிமென்டு சாலைகளாகவும் அடுத்த 4 ஆண்டுகளில் மாற்ற திட்டமிடப்படுள்ளது.

  • நகராட்சி, மாநகராட்சிகளில் புதிதாக வரன்முறை செய்யப்பட்ட மனை பிரிவுகளில் 2007, 2008ம் ஆண்டுகளில் தெரு விளக்கு வசதிகள் செய்து தரப்படும்.

  • அரசின் வரி வருவாயில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் பங்கினை 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

  • சென்னை புறநகரில் 5 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 22 ஊராட்சிகள், ஒரு கண்டோண்ட்மன்ட் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பாதாள சாக்கடை திட்டத்திற்கான திட்ட அறிக்கை ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டுள்ளன.

  • நடப்பு ஆண்டில் 60 நகரங்களுக்கு ரூ. 389 கோடி செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டபணிகள் நிறைவேற்றி பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X