For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனிதாவின் விண்வெளி மாரத்தான்

By Staff
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்:சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருக்கும் வீராங்கனை சுனிதா விண்ணிலேயே மாரத்தான் ஓட்டம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இரு மாதங்களுக்கு முன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தார். அங்கு தங்கி ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறார்.

Sunitha Williams

இந் நிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதில் விண்வெளியில் இருந்தவாரே சுனிதாவும் பங்கேற்றுள்ளார்.

நடைபயிற்சி இயந்திரமான டிரட் மில்லில் சுனிதா இந்த ஓட்டப் பந்தயம் மேற்கொண்டார்.

Astronaut Sunita L. Williams will run the 26.2 miles of the Boston Marathon on a treadmill aboard the space station on April 16, 2007.

42 கி.மீ தூரத்தை மணிக்கு மணிக்கு 8 கி.மீ என்ற வேகத்தில் சுனிதா ஓடினார்.

பூமியில் இருந்து 210 கி.மீ உயரத்தில் பறந்தபடி இந்த சாதனையை சுனிதா செய்துள்ளார். 42 கி.மீ. தூரத்தை சுனிதா ஓடிக் கடப்பதற்குள் இரண்டு முறை பூமியை சுற்றி வந்துவிட்டது அவர் தங்கியுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X