For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுஎஸ்: வீடியோ அனுப்பிவிட்டு தாக்குதல்நடத்திய சோ சுங்- பரபரப்பு படங்கள்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 32 பேரை சுட்டு கொன்ற தென்கொரிய மாணவன் சோ சியூங் தாக்குதல் நடத்துவதற்கு முன், தன் புகைப்படத்தையும், வீடியோ மற்றும் கடிதங்களையும் என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளான்.

அதில் பல கோணங்களில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார் சோ. சில காட்சிகளில் கத்தி, சுத்தியலுடன் காணப்படுகிறான்.

விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தவர் சோ. இவரது பெற்றோர் சலவைத் தொழில் செய்து வருகின்றனர்.

தன்னுடன் படித்து வந்த எமிலி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார் சோ. ஆனால் சோவின் சைக்கோ கேரக்டர் பிடிக்காததால் எமிலி தனது காதலைத் துண்டித்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ளார் சோ.

அவர் முதலில் சுட்டுக் கொன்றதே எமிலையைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது கொலை வெறியாட்டத்தை மிக மிக தெளிவாகத் திட்டமிட்டு செய்துள்ளான் சோ.

கொலை வெறியாட்டத்தை நிகழ்த்தத் திட்டமிட்டவுடனேயே துப்பாக்கியுடன் பலவிதங்களில் போஸ் கொடுத்தபடி வீடியோ படங்களை எடுத்துள்ளார். பின்னர் தீவிரவாதிகள் உரை நிகழ்த்துவது போல ஒரு இறுதி உரையையும் நிகழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவை என்பிசி தொலைக்காட்சி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளான்.

இதுக்குறித்து என்பிசி செய்தி மேலாளர் ஸ்டீவ் கேபஸ், சோ சியுங் அனுப்பிய கடிதம், படங்கள், வீடியோ ஆகியவை எங்களுக்கு தாக்குதல் நடந்த திங்கட்கிழமை காலை கிடைத்தது. உடனே அதை நாங்கள் எப்.பி.ஐ தலைமையகத்திடம் ஒப்படைத்துவிட்டோம் என்றார்.

எம்எஸ்என்பிசி நிறுவனம் தெரிவிக்கையில், முதலில் வகுப்பறையில் 30 பேரை கொன்றுள்ளான். பின்னர் 2 பேரை ஹாஸ்டல் ஹாலில் கொன்றுள்ளான்.

சோ சியூம் ஹூய், தன்னுடைய புகைப்படம், வீடியோ மற்றும் கடிதங்களை அனுப்பியுள்ளான். 43 படங்களில் 11 படங்கள் துப்பாக்கியுடன் நிற்பது போலவும், 2 கைகளில் துப்பாக்கி பிடித்தபடி கேமரா முன் நிற்பது போலவும் காட்சிகள் உள்ளன. இது தவிர 28 வீடியோ கிளிப்பிங்கும் உள்ளன.

மேலும் அதில் 1,800 வார்த்தைகளுக்கு மேல் உள்ள செய்தியில், என்னை இந்த மாதிரியாக ஆளாக்கியதே நீங்கள் தான். இதை தடுக்க எத்தனை வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தவறவிட்டுவிட்டீர்கள். என்னை ரத்தம் சிந்த வைத்துவிட்டீர்கள். இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளி விட்டீர்கள், நீங்களே பொறுப்பு.

உங்கள் கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதை துடைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு, நான் பேசாமல் போயிருக்கலாம், இனி என்னால் ஓட முடியாது என கூறியுள்ளான்.

வீடியோவில், ஆத்திரத்துடனும், அமைதியற்றும் காணப்படுகிறான் சோ.

ஆனால், அவன் நடத்திய துப்பாக்கி சூடு சம்பந்தமான எந்த புகைப்படமும் இல்லை. இது விர்ஜினியா பல்கலைக்கழக தபால் அலுவலகத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் தான் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளான் என்றார்.

விர்ஜீனியா பல்கலைக் கழக செய்தித் தொடர்பாளர் லாரி ஹின்கர் கூறுகையில்,

சோ பெரும்பாலும் தனிமை விரும்பியாகத் தான் வாழ்ந்துள்ளான். அவரை பற்றி தகவல் அறிவதே பெரும் கஷ்டமாக உள்ளது. அவன் 2 நாடகங்களை எழுதியுள்ளான். அதில் வளர்ப்பு மகன் குறித்த நாடகத்தில் மகன் தந்தையை கொல்வது போன்று எழுதியிருந்தார்.

மற்றொன்றில் சித்தரவதை செய்யும் ஆசிரியரை சுட்டுக் கொல்வது போன்று எழுதியிருந்தது கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வன்முறைகள் இவரது கற்பனையில் தோன்றும் என்றார்.

சோ பயின்ற ஆங்கில துறையைச் சேர்ந்த பேராசிரியர் கரோன் கூறுகையில், அவருடைய எழுத்துகளில் இருந்த குரூரம் குறித்து பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் தகவல் அனுப்பியிருந்தோம் என்றார்.

என்றாவது ஒரு நாள் இவ்வாறு நடக்கும் என எங்களுக்கு தெரியும் என எதிர்ப்பார்த்தோம் என சக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த இடத்தில் அவரின் பை கிடைத்தது. அதில் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்களும், அவன் வைத்திருந்த பையில் டைப் செய்யப்பட்ட 8 பக்கமுள்ள பேப்பரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் பணக்கார குழந்தைகளையும், மதத்தையும் எதிர்த்து வசனங்கள் காணப்பட்டதாகவும் முடிவு நெருங்கிவிட்டது, இந்த செயலை செய்தாக வேண்டும் என்ற வார்த்தைகளும் இருந்தன. சொந்த மதம் குறித்து அதிருப்தியும், கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அநேக குறிப்புகளும் கடிதத்தில் இருந்தது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் அவன் ஒரு சைகோ என்று தெரிகிறது

தாக்குதல் நடத்தும் முன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தே இந்தப் படங்களை என்.பி.சி டிவிக்கு சோ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இந்தப் படங்களைப் பார்த்த என்.பி.சி. நிறுவனத்தினர், இது ஏதோ தவறாக வந்து விட்ட பார்சல் போல என்று முதலில் நினைத்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்த பிறகுதான் தங்ளுக்கு வந்த பார்சல் எவ்வளவு பெரிய பயங்கரத்தை சுமந்துள்ளது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒப்புதல் வாக்குமூலம் போல இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அமைந்துள்ளன. ஆனால் என்ன காரணத்திற்காக தான் எப்படிச் செய்தேன் என்பதை சோ தெளிவாக விளக்கவில்லை. இதனால் சோவின் இந்த வெறியாட்டத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை புலனாகவில்லை.

காதல் தோல்வி என்று தான் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X