For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோகநாதன் குடும்பத்தினர் அமெரிக்கா கிளம்பினர்:வாஷிங்டன்- விர்ஜினீயா செல்ல சிறப்பு விமானம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தென் கொரிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பேராசிரியர் லோகநாதனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது பெற்றோர் உள்பட 9 பேர் நேற்று நள்ளிரவு அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றனர்.

லோகநாதனின் உடல், அவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது விருப்பப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது.

Loganathans father getting passport from official

இதில் கலந்து கொள்வதற்காக லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட 9 பேர் அமெரிக்கா செல்ல முடிவு செய்யப்பட்டது. அவர்களில் லோகநாதனின் பெற்றோர் வாசுதேவன், கண்ணம்மாள், சகோதரர் செங்கோட்டுவேலவன், அண்ணி செந்தமிழ்ச் செல்வி, இன்னொரு சகோதரர் பழனிவேல், அண்ணி நிர்மலா ஆகியோருக்கு மட்டும் பாஸ்போர்ட் இல்லை.

இதையடுத்து இவர்கள் நான்கு பேருக்கும் முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதேபோல 9 பேருக்கும் அமெரிக்க தூதரகம் உடனடியாக விசாவும் வழங்கியது.

Loganathans Mother

இவர்களின் போக்குவரத்து செலவையும் அரசே ஏற்கும் என கருணாநிதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1.50 மணிக்குக் கிளம்பிய சென்னை-வாஷிங்டன் இடையிலான லூப்தன்சா விமானத்தில் 9 பேரும் கிளம்பிச் சென்றனர். வாஷிங்டனில் இருந்து விரிஜீனியா செல்ல சிறப்பு சார்ட்டட் விமானத்தை பல்கலைக்கழகமே ஏற்பாடு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X