For Daily Alerts
Just In
சத்தம் போடாமல் 34க்குத் திரும்பிய சச்சின்!
மும்பை: நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 34வது பிறந்த நாளை மிக எளிமையாக கொண்டாடினார்.
வழக்கமாக தன் பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடும் சச்சின் நேற்று எளிமையாக கொண்டாடினார். இதற்குக் அவரது ஆட்டத்திறன் குறித்த சர்ச்சைகள், உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்தது, வங்கதேச டூரில் ஒரு நாள் போட்டியிலிருந்து சச்சின் நீக்கப்பட்டது என பல காரணங்களைக் கூறலாம்.
சச்சின் கடைசியாக விளையாடிய 50 ஒரு நாள் போட்டிகளில் 4 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்தவர் என்ற சாதனைக்கு சொந்தகாரரான இவர் கடந்த 20 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கிரிக்கெட் பிறந்த நாள் love affair வங்கதேசம் thatstamil tour sachin tendulkar national miss சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் headlines india news online worldcup உலகக் கோப்பை
Story first published: Wednesday, April 25, 2007, 5:30 [IST]