For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிவியின் புதிய குட்டீஸ் சேனல் சுட்டி டிவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சன் குழுமத்திலிருந்து புதிதாக ஒரு குட்டி டிவி பிறக்கிறது. அதன் பெயர் சுட்டி டிவி.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நம்பர் ஒன் சானல்களைக் கொண்டுள்ள சன் டிவி வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழில் முதல் குழந்தைகள் சேனலை தொடங்குகிறது.

Chutty TV - Logo

சுட்டி டிவி என்ற இந்த டிவி முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான தமிழ் கார்ட்டூன் சேனலாகும்.

தொடக்கத்தில் சில மாதங்களுக்கு இந்த சேனல் ஃப்ரீ சேனலாக இருக்குமாம்.

கோடை விடுமுறையில் குழந்தைகள் எல்லாம் குதூகலித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிகச் சரியாக சுட்டி சேனலை ரிலீஸ் செய்கிறது சன்.

Chutti TVs Mascot Singoo the Lion Cub

இதுதொடர்பாக சன் குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முற்றிலும் தமிழிலேயே வெளிவரும் முதலாவது இந்திய கார்டூன் சேனல் இதுதான்.

2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள்தான் எங்களது டார்கெட். அதேசமயம், குழந்தைத்தனமான உள்ளம் கொண்ட அனைவருக்கும் இந்த சேனல் பிடிக்கும்.

இந்த சேனல் ஒளிபரப்பு காலை 6.30 மணிக்கு தொடங்கும். நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சி தெடாரும்.

குட்மார்னிங் சுட்டி என்ற நிகழ்ச்சியோடு தினமும் தொடங்கும் இதன் ஒளிபரப்பில் யோகா, நடனம், பரதநாட்டிய பயிற்சி, பொழுதுபோக்கு என பல தரப்பட்ட நிகழ்ச்சிகளும் அடங்கும்.

சுட்டி டிவி குறித்து சன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் சக்சேனா கூறுகையில், விடுமுறையில் குழந்தைகள் ஜாலியாக இருக்கும் இந்த நேரத்தில் சுட்டி டிவியை தொடங்குகிறோம்.

பள்ளிகள் திறக்கும் வரை சுட்டிக் குழந்தைகளுக்கு இந்த டிவி பெரும் விருந்தாக அமையும். அதன் பின்னரும் கூட சுட்டிகளைக் கவரும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்குவோம்.

உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகள், ஜாக்கி ஜான், கோட்ஸில்லா உள்ளிட்டோரின் படங்களும் இதில் இடம் பெறும்.

Chutty TV

அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரிஜினாலிட்டி மாறாமல் தமிழில் வழங்கப்படும். டப்பிங் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் போலத் தெரியாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

கிட்ஸ் கில்லாடிகள் என ஒரு டேலன்ட் ஹன்ட் ஷோவும் நடத்தவுள்ளோம்.

அதேபோல சுட்டி லூட்டி என்ற காமெடி ஷோவும் இடம் பெறும். கலாட்டா கச்சேரி, சுட்டி சேட், ஹலோ சுட்டி, சுட்டி மன்றம் என பல தரப்பட்ட நிகழ்ச்சிகள் விருந்து படைக்க வரிசையாக வருகின்றன என்றார் சுனில்.

ஏற்கனவே இந்தியாவில் போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், வால்ட் டிஸ்னி, அனிமேக்ஸ், ஜெட்டிக்ஸ் என ஐந்து பிரபல கார்ட்டூன் சானல்கள் உள்ளன. இவையெல்லாம் சர்வதேச சேனல்கள்.

ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக பிராந்திய மொழியில் ஒரு கார்ட்டூன் சேனல் வருவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் சன் குழுமம் புதிய சாதனை படைத்துள்ளது.

சுட்டி அடிக்கட்டும் அட்டகாச லூட்டி!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X