For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள்-ஒரு ஃபிளாஷ்பேக்

By Staff
Google Oneindia Tamil News

1975, லார்ட்ஸ், இங்கிலாந்து.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் ஆடி 60 ஓவர்களில் 291 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 58.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்களில் ஆட்டமிழந்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன் கிளைவ் லாயிட்.

1979, லார்ட்ஸ், இங்கிலாந்து

மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் ஆடி 60 ஓவர்களில் 286 ரன்களை எடுத்து. பின்னர் ஆடிய இங்கிலாந்து 194 ரன்களில் ஆட்டமிழந்தது. 92 ரன்ளில் மேற்கு இந்தியத் தீவு அணி வென்றது. ஆட்ட நாயகன் விவ் ரிச்சர்ட்ஸ்.

1983, லார்ட்ஸ், இங்கிலாந்து

இந்தியா முதலில் ஆடி 54.4 ஓவர்களில் 193 ரன்களை எடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்களில் சுருண்டது. இந்தியா 43 ரன்களில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன் மொகீந்தர் அமர்நாத்.

1987, கொல்கத்தா, இந்தியா.

ஆஸ்திரேலியா முதலில் ஆடி 50 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 246 ரன்களில் ஆட்டமிழந்தது. 7 ரன்களில் சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா. ஆட்ட நாயகன் டேவிட் பூன்.

1992, மெல்போர்ன், ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் முதலில் ஆடி 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 22 ரன்களில் முதன் முறையாக பாகிஸ்தான் சாம்பியன். ஆட்ட நாயகன் வாசிம் அக்ரம்.

1996, லாகூர், பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா முதலில் ஆடி 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 245 ரன்கள் எடுத்து சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன் அரவிந்த டிசில்வா.

1999, லார்ட்ஸ், இங்கிலாந்து

பாகிஸ்தான் முதலில் ஆடி 39 ஓவர்களில் 132 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 20.1 ஓவர்களில் 133 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன் ஷேன் வார்ன்.

2003, வாண்டரர்ஸ், தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியா முதலில் ஆடி 50 ஓவர்களில் 359 ரன்களைக் குவித்தது. இந்தியா பின்னர் ஆடி 39.2 ஓவர்களில் 234 ரன்களில் ஆட்டமிழந்தது. 3வது முறையாக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா. ஆட்ட நாயகன் ரிக்கி பாண்டிங்.

2007, பார்படோஸ், மே.இ. தீவுகள்

சாம்பியன் ஆகப் போவது யாரு?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X