For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகளின் செயல்-கருணாநிதி அதிர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலைப்புலிகள் கடத்திக் கொண்டு போயிருக்கும் செயல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் விடுதலைப்புலிகள் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, விடுதலைப்புலிகளை ஆதரித்து தான் தீருவோம், எங்களை எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒரு கை பார்க்கிறோம் என்ற அறை கூவல் பிரபலமான நாளிதழில் வந்திருந்தது.

மேலும் அதில் விடுதலைப்புலிகளை நாங்கள் என்றும் ஆதரிப்போம், இலங்கை இறுதி போர் நடந்து வருகின்றது. அதை ஆதரிப்போம் என்றிருக்கிறது. அவர்களுடைய கட்சியை சேர்ந்த சீமா பஷீரை வேண்டுமென்றே பழி வாங்க கைது செய்யப்பட்டார் என சொல்லப்பட்டிருந்தது.

திமுக கழக பிரதிநிதி இதயதுல்லாவும் கைது செய்யப்பட்டார் என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நடுநிலையோடு சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுகிறது என்பதற்கு இதுவே தக்க சான்று. எதிர்கட்சித் துணை தலைவர் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை அவைக்கு அளித்து அதை பற்றி பேசாமலேயே வெளிநடப்பு செய்துவிட்டார். மீண்டும் வந்து பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் பேசாமலேயே போய்விட்டார்.

கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணா என்ற விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு மாதாந்திர உதவி செய்ய வேண்டுமென்று உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஆறுமுகம் ஆகியோர் கேட்டுகொண்டதன் அடிப்படையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போது தெரிவித்தேன்.

அவர்களுடைய குடும்பங்களுக்கு மாதத்தோறும் ரூ.1,500 அரசின் சார்பாக வழங்கப்படும் என அறிவித்து அவர்களை கண்டுபிடிக்கும் பணியும் தொடரும் என குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது காணாமல் போன 12 மீனவர்களும் இலங்கை கடற்புலிகளின் ஒரு குழுவினரால் சிறை பிடிக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் ஒரு முகாமில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது எல்லாவற்றுக்கும் புலிகள் தான் காரணம் என்று ஞானசேகரன் கூறுவதாக தெரிவித்து இருந்தேன். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் என்னால் அதைத்தான் சொல்ல முடிந்தது. ஒரு அரசின் சார்பாக பொறுப்புள்ள ஒரு இடத்திலே இருக்கின்ற நான் சொல்லும் போது அதிலே நான் அவசரப்பட்டுச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் அன்றைக்கு நான் அதை அந்த அளவிலே மறுத்தேன்.

ஆனால் இப்போது வந்திருக்கின்ற தகவல் ஊர்ஜிதப்படுத்தப்டட தகவல். 12 மீனவர்களும் இலங்கை கடல்புலிகளில் ஒரு குழுவினரால் சிறை பிடிக்கப்பட்டு, விடுதலைப்புலிகளின் ஒரு முகாமில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடல்புலிகளின் ஒரு குழுதான் பொறுப்பு என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியக் கடலோரப் பாதுகாப்பு படையினர் மரியா என்ற படகையும், அதில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 நபர்களையும் விசாரணை செய்ததின் அடிப்படையில் மேற்கண்ட தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன.

கடல் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 12 மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு, மத்திய அரசின் மூலமாக அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ளும். இதற்கு முன்பு நமக்கு கிடைத்த தகவல்படி நடைபெற்ற இந்த சம்பவம் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டதாக கருதி கொண்டு அந்த தகவலை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

இதுகுறித்து பிரதமருக்கு நாம் முன்பு எழுதிய கடிதத்தில், இந்த சம்பவம் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டு, நமது மீனவர்களை தாக்கியவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

நமது மாநிலத்தின் கடலோர பகுதிகளில் நமது கடலோர பாதுகாப்பு படையின் மூலமாகவும், கடற்படை மூலமாகவும் கடல் சார்ந்த மற்றும் வான்வழியிலான கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட வேண்டும். மாநிலத்தின் மொத்த கடல் பகுதி ஒரே நிர்வாக கட்டுபாட்டின் கீழ் கொடு வரப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

இந்த மாதம் 3ம் தேதியன்று பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில், தூத்துகுடியில் கடலோர கண்காணிப்பு கப்பல், ஹெலிகாப்டர் வைக்கப்பட வேண்டும். தூத்துகுடி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வசதியினை அமைத்து கடலோர காவல்படை அதனை பயன்படுத்துவதற்கும், கன்யாகுமரியில் கடலோர காவல்படை நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும், ரூ.55 கோடியில் மாநில மீன்வளத்துறை சீம்லெஸ் கம்யூனிகேஷன் பிராஜெக்ட் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இதுவரை இந்த சம்பவத்திற்கு இலங்கை கடற்படையினர் காரணம் என்று கருதியதற்கு மாறாக நாம் அனைவரும் அதிர்ச்சியடைய தக்க வகையில் இதிலே விடுதலைப்புலிகளின் சம்பந்தம் உண்டு என்ற இந்த செய்தி கிடைத்துள்ளது என்பதை வருதத்ததோடு தெரிவித்து கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X