For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும்இனி இலவச பஸ் பாஸ்-பொன்முடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னைஅரசுக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இனி இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்திற்குப் பதில் அளித்து பொன்முடி பேசுகையில், கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் ஷிப்ட் முறை அமலுக்கு வருகிறது.

அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாட நூல்கள் இலவசமாக வழங்கப்படும்.

அதேபோல, அரசுக் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

மாணவர்களின் மக்கப்: தடுக்க புதுத் திட்டம்

மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்துப் படிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உயர்கல்வியை பொறுத்தவரை தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. பொறியியல் வகுப்புகளில் ஒரு லட்சம் மக்களில் சராசரியாக 49.54 சதவீதம் பேரும், பல்தொழில் பட்டய வகுப்புகளில் 27.20 சதவீதம் பேரும் படிக்கின்றனர். இந்தியாவில் பொறியியல் கல்வியில் தமிழகம் முதன்மை நிலையை பெற்றிருக்கிறது.

உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 2020ம் ஆண்டுக்குள் தற்போதைய நிலையான 11.73 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

உயர்கல்வியில் தேசிய சராசரி மொத்த மாணவர் சேர்க்கை 9.21 சதவீதமாகவும், மக்கள் தொகையில் 18 வயதிலிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி செல்கின்றனர்.

திருச்சி மற்றும் கோவையிலும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வருகின்ற கல்வியாண்டு முதல் திருநெல்வேலியிலும் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் பல்கலைக் கழக தேர்வுமுறை மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதாக உள்ளது. மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் பகுத்தாய்வு செய்யும் தன்மையை சோதனை செய்வதே தேர்வுகளின் நோக்கமாக இருக்க வேண்டும். கற்பிப்பது, பயில்வது மற்றும் மதிப்பீடு செய்யும் முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இதற்கான வழிமுறைகள் கண்டறிய முன்னாள் துணைவேந்தர் தலைமையில் வல்லுனர் குழு அமைத்து, அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்படும்.

முதற்கட்டமாக நானோ தொழில்நுட்பத்தில் சிறப்பு தகுதி மையம் ஏற்படுத்த கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிதியுதவியாக ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்போது 251 பொறியியல் கல்லூரிகளும், 94,138 ஒப்பளிக்கப்பட்ட இடங்களும் உள்ளன. பொறியாளர்களை உருவாக்குவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

ஆண்டுதோறும் 65,201 பொறியியல் பட்டதாரிகளும், 35,455 பட்டயதாரர்களும் உருவாகின்றனர். தனியார் பல்தொழில் நுட்ப கல்லூரிகள் 142 ஆக உயர்ந்துள்ளது என்றார் பொன்முடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X