For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு-மதுரையில் பழ.நெடுமாறன் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த மதுரையில் மாறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக் தேசிய இயக்கத் தலைவரும் பெரியாறு அணை உரிமை மீட்பு குழுத் தலைவருமான பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு பல்வேறு காரணங்களை கூறி அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு குழு சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மதுரை தமுக்கம் மைதானத்திற்கு முன்பு நெடுமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நெடுமாறன் பேசியதாவது,

பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதை அமல்படுத்த விடமால் கேரள அரசு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

இதை கண்டித்து அணையின் மதகுகளை மூட வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தினோம். ஆனால் அரசு அதை செய்யவில்லை. இந்த ஆண்டாவது மதகுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட நெடுமாறன் உள்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X