வெட்டியான்கள் இனி மயான ஊழியர்கள்!
சென்னை:வெட்டியான்கள் இனிமேல் மயான ஊழியர்கள் என அழைக்கப்படுவர் என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் மாநகராட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெட்டியான் என்று அழைக்கப்படுவோர் இனிமேல் மயான ஊழியர்கள் என்று அழைக்கப்படுவர்.
மாநிலம் முழுவதும் உள்ள மயானங்களில் பணியாற்றி வரும் மயான ஊழியர்களின் பணி முறைப்படுத்தப்படும். தற்போது 173 மயான ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் உள்ள மயான ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றார்.
நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் 155 கவுன்சிலர்களுக்கும், 677 அதிகாரிகளுக்கும் மாநகராட்சி சார்பில் இலவசமாக செல்போன்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து மேயர் மா.சுப்ரமணியன் கூறுகையில்,
இந்த செல்போன்கள் மூலம் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க முடியும். இந்த செல்போன் எண்கள் அனைத்து வார்டு மக்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும்.
எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தங்களது குறைகளை மக்கள் கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கலாம் என்றார்.
(ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தினாலே ஒரு வேலையும் நடக்கல.. எஸ்எம்எஸ் அனுப்புனா பிரச்சனையை தீர்ந்துருமா..)












Click it and Unblock the Notifications