என் வழக்குகளை வாபஸ் பெறக் கூடாது- கேரள அரசுக்கு மதானி கோரிக்கை
கொச்சிகேரள நீதிமன்றங்களில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டாம் என கோவை குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கோரியுள்ளார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் மதானி பேசுகையில், என்னைப் பொருத்தவரை, தவறு செய்தவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும். நான் தவறு செய்திருந்தால் என்னை சட்டம் தண்டிக்கட்டும். இல்லாவிட்டால் என்னை விடுவிக்கட்டும்.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய் என்பது நீதிமன்றங்களில் நீருபணமாகும்.
நீதித்துறை மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். என் மீதான வழக்குகளில் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
என் மீது உள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என நான் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை. வாபஸ் பெற வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
கேரள இடதுசாரி அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த அரசுக்கு எங்களது கட்சி கொடுத்து வரும் ஆதரவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் நலனுக்காகவே எங்களது கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்களை தலித் என்றும் தலித் அல்லாதவர்கள் என்றும் தரம் பிரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் நலனைக் கருதித்தான் அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகள் நான் சிறையில் இருந்த காலத்தில் எனது தவறுகளை புரிந்து கொண்டு, என்னைத் திருத்திக் கொள்ள உதவியுள்ளது.
எனது பேச்சுக்களில், தவறு செய்பவர்களை நான் கண்டித்துள்ளேன். அவை அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இனிமேல் அதுபோன்ற கடுமையான விமர்சனங்களை நான் குறைத்துக் கொள்வேன்.
முஸ்லீம் லீக்குடன் எனது கட்சி எந்த உறவையும் வைத்துக் கொள்ளாது. எனது கட்சி முஸ்லீம்களுக்கான கட்சி மட்டும் அல்ல. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக பாடுபடும் கட்சி.
கேரளாவில் 3வது அணியை அமைப்பது குறித்து எங்களுடன் சிலர் பேசினர். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.
நானோ அல்லது எனது கட்சித் தொண்டர்களோ, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால் சமூகப் பொறுப்புடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசுப் பதவி எதிலும் அமரும் எண்ணமும் எனக்கு இல்லை.
நான் கோவை சிறையில் இருந்தபோது எனக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைப்பதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பாடுபட்டார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார் மதானி.
மதானி மீது கேரளாவில் உள்ள 2 நீதிமன்றங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications