For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயிலை பற்களால் இழுத்த மலேசிய தமிழர்!!

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:மலேசியாவைச் சேர்ந்த தமிழரான ராதாகிருஷ்ணன் வேலு என்பவர் தனது பற்களால் 7 பெட்டிகள் கொண்ட ரயிலை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

Rathakrishnan Velu

மலேசியத் தமிழரான ராதாகிருஷ்ணன் வேலு ஒரு சாதனைப் பிரியர். பல சாதனைச் செயல்களை நிகழ்த்தியுள்ள அவருக்கு ரயிலை பற்களால் கடித்து இழுக்கும் புதிய சாதனையைப் படைக்கும் ஆர்வம் எழுந்தது.

Rathakrishnan Velu

இதையடுத்து கோலாலம்பூர் பழைய ரயில் நிலையத்தில் தனது சாதனையை நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் நிகழ்த்தினார். 7 பெட்டிகள் கொண்ட ரயில் இதற்காக வரவழைக்கப்பட்டது. அந்த ரயிலின் எடை 297.1 டன் ஆகும்.

பின்னர் அந்த ரயிலை தனது பற்களால் இழுத்து சாதனை படைத்தார் வேலு. இந்த சாதனையை கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X