For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபரப்பு...நாளை கூடுகிறது தமிழக சட்டசபை!

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

சேது சமுத்திர விவகாரம்-ராமர் பால சர்ச்சை உச்சத்தில் உள்ள நிலையில் தமிழக சட்டசபையில் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

File photo of Governor and CM at assembly sessionடாடா தொழிற்சாலை விவகாரம், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் இந்தக் கூட்டத் தொடரில் மீண்டும் வெடிக்கக் கூடும்.

ஆனால் ராமர் பாலம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சட்டசபையில் இதுபற்றிய விவதாதத்தை அரசும் எதிர்க் கட்சிகளும் ஒரு எல்லைக்கு மேல் எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் கொண்டு வரப்படலாம். அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அதை அதிமுக புறக்கணிக்கலாம், பாஜக எதிர்த்து வாக்களிக்கலாம், ஆனால், மதிமுக என்ன செய்யும் என்பது தெரியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா இந்த முறையாவது சட்டசபைக்கு வருவாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே.

அதே போல அதிமுகவுக்கு இணையாக அரசுக்கு பாமக ரூபத்தில் எதிர்ப்பு கிளம்பவும் வாய்ப்புள்ளது. மணல் கடத்தல், டாடா ஆலை, நெய்வேலி அனல் மின் நிலைய பிரச்சினை போன்றவற்றை பாமக எழுப்பலாம்.

அதிமுக சார்பில் இலவச கலர் டி.வி விவகாரம் கிளப்பப்படும். காங்கிரஸ் கட்சியால் தலைவலி ஏதும் இருக்காது என்றே ெதரிகிறது. திமுக மீதான அதிமுகவின் தாக்குதலுக்கு காங்கிரஸ் மூலம் முதல்வர் பதிலடி தரலாம்.

இந்தக் கூட்டத் தொடரல் முஸ்லீம்கள், கிருஸ்துவர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X