For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செஸ் சாம்பியன் ஆனந்த்துக்கு கெளரவ டாக்டர் பட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Viswanathan Anandசென்னை: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சென்னை சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இன்று கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றார் ஆனந்த். இதற்காக தமிழக அரசு அவருக்கு பரிசுத் தொகை வழங்கிக் கெளரவித்தது.

இந்த நிலையில் ஆனந்த்துக்கு தற்போது சத்யபாமா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஆனந்த்துக்கு டி.ஆர்.டி.ஓ. தலைமை கண்ட்ரோலரும், பிரபல விஞ்ஞானியுமான சிவதாணுப் பிள்ளை பட்டத்தை வழங்கினார்.

ஏற்னவே நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பட்டத்தைப் பெற்ற பின்னர் ஆனந்த் கூறுகையில், இந்தப் பட்டம் மேலும் பல சாதனைகளைப் புரிய எனக்கு உத்வேகமாக இருக்கும் என்றார்.

ஆனந்த் தவிர பேராசிரியர் விஜய் வரதனுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X