எல்ஐசி அலுவலகத்தில் ரூ.16 லட்சம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

வள்ளியூர்: வள்ளியூர் எல்ஐசி அலுவலகத்தில் லாக்கரை உடைத்து ரூ.16 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் அருகே எல்ஐசி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். டிசம்பர் மாத இறுதியில் ஆண்டு இறுதி கணக்கு முடிப்பதற்காக அனைத்து ஊழியர்களும் நேற்றிரவு 9 மணி வரை வேலை பார்த்தனர்.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் எல்ஐசி அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அலுவலகத்தின் கிளை மேலாளர் சங்கரநாராயணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அலுவலகத்திற்கு வந்து பார்த்து போலீசில் புகார் செய்தார்.

உடனே வள்ளியூர் டி.எஸ்.பி ராஜகோபால் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் மெயின் லாக்கரை உடைத்து ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+