For Daily Alerts
Just In
மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்-ரோஜா

ஆந்திராவில் கடந்த சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட நடிகை ரோஜா 5,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.
இதையடுத்து ரோஜாவை மாநில மகளிர் அணித் தலைவியாக நியமித்தார் ஆந்திரா முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு. அதிலிருந்து ரோஜா தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந் நிலையில் குண்டூரில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த தேர்தலில் தெலுங்குதேசம் எளிதாக ஆட்சியை பிடித்துவிடும். அந்த தேர்தலில் நான் மீண்டும் நகரி தொகுதியில் தான் போட்டியிடுவேன். நகரி மக்கள் என்னை எளிதாக வெற்றிப் பெற செய்வார்கள் என்றார்.