For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாறுமாறாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

By Staff
Google Oneindia Tamil News

Damaged under carriage of crash landed British Airways flight
லண்டன்: லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானம் தாறுமாறாக தரையிறங்கியது. இதில் அந்த விமானத்தின் இடதுபக்க இறக்கை உடைந்தது. ரன்வேயில் தரையிறங்காமல் அருகாமையில் உள்ள புல்வெளியில் தரையிறங்கி தாறுமாறாக ஓடி ரனேவேயின் ஆரம்பத்தில் போய் நின்ற அந்த விமானத்தின் என்ஜினும் உடைந்தது.

இந்த பெரும் விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் பயணிக்கவிருந்த விமானம் உள்பட பல்வேறு விமானங்கள் மிக அருகாமையில் இருந்த நிலையில் விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை (வியாழக்கிழமை) இந்த விபத்து நடந்தது. சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து வந்த அந்த விமானம் தரையிறங்கியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

விமானத்தை ஓடுபாதையில் சரியாக தரையிறக்க விமானி கடுமையாக போராடியும் முடியவில்லை. மிக வேகமாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடு பாதைக்கு முன்பே புல்வெளியில் தரையை தொட்டது.

பின்னர் தாறுமாறாக ஓடிய அந்த விமானத்தின் சக்கரங்கள் உடைந்து விழுந்தன. இடதுபுர இறக்கை உடைத்து. இடதுபுற என்ஜினும் தரையில் உரசியபடி அந்த விமானம் ஓடியது. பின்னர் ஒரு வழியாக ரன்வேயை தொட்டு நின்றது.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் விமானம் தீப் பிடிப்பதை தடுக்க ரசாயனங்களையும் நீைரயும் பீய்ச்சி அடித்தனர்.

விமான சிப்பந்திகள் மிகத் துரிதமாக செயல்பட்டு அதில் இருந்த 136 பயணிகளையும் பத்திகமாக தரையிறக்கினர். விமானம் ஹார்ட் லேண்டிங் ஆனதில் 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்துக்கான காரணத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், தீவிரவாத தாக்குதல் ஏதும் இல்லை என்று மட்டும் தெரிவித்துள்ளது.

தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் நின்றுவிட்டதாகவும், சக்கரங்கள் கீழே இறங்கவில்லை என்றும், என்ஜின்களின் செயல்பாடும் நின்றுவிட்டதாகவும். விமானத்தை கிளைடர் போல இயக்கியே அதை தரையிறக்கியதாக விமானத்தை இயக்கிய விமானி கூறியதாக தகவல்கள் வருகின்றன.

இந்த விமானம் நிலை தடுமாறி ஓடியபோது பிரதமர் கார்டன் பிரவுன், தனது மனைவியுடன் இன்னொரு விமானத்தில் பீஜிங் செல்வதற்காக அமர்ந்திருந்தார். மேலும் சில விமானங்களும் விமான நிலையத்தில் பயணிகளுடன் நின்று கொண்டிருந்தன.

தறி கெட்டு ஓடிய விமானம் பிரவுன் இருந்த விமானத்திலோ அல்லது வேறு விமானங்கள் மீதோ மோதியிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

இதன் காரணமாக ஹீத்ரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் புறப்படுவது சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. ஹீத்ரூ விமான நிலையத்திற்கு வந்த சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

சில மணி நேர தாமதத்திற்குப் பின்னர் கார்டன் பிரவுன் சீனா புறப்பட்டுச் சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X